பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-1.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விகடன் தான் முதன் முதலாகச் சிறப்பு மலரை பெரிய அளவில் வெளியிட்டது. ஆண்டு தோறும் தீபாவளியை ஒட்டி மலர் வெளிவந்தது. 'சுதேசமித்திரன் நாளிதழும் விஜயதசமி மலர் என்று வெளியிட்டது. தினமணி இலக்கியத் தரத்துடன் ஆண்டு மலர் வெளியிடுவதில் கவனம் செலுத்தியது. - ஆரம்பத்தில் பாரதி மலர் என்று இரண்டு வருடங்கள் வெளி யிட்டது. நீளவடிவில் - தினமணி பத்திரிகையை இரண்டாக மடித்த அளவில் அம் மலர்கள் அமைந்திருந்தன. 1935ஆம் வருடத்திய மலரில் சிறப்பான சிறுகதைகள் அதிகம் இடம் பெற்றிருந்தன. புதுமைப் பித்தனின் புதிய கூண்டு என்ற குறிப்பிடத்தகுந்த நல்ல கதை அந்த மலரில் வந்தது. 1937ஆம் வருடத்திய தினமணி ஆண்டு மலர் மிகத்தரமான தயாரிப்பாக விளங்கியது. புதுமைப்பித்தன் கவனிப்பில் உருவான மலர் அது. பு:பியின் நினைவுப் பாதை, மெளனியின் எங்கிருந்தோ வந்தான் முதலிய சிறந்த சிறுகதைகள், ந. பிச்சமூர்த்தியின் கிளிக்கூண்டு கவிதை, இளங்கோவன் (ம.க. தணிகாசலம்) எழுதிய சாவே வா என்ற அருமை யான தத்துவ சிந்தனைக் கட்டுரை. மற்றும் பல அரிய விஷயங்கள் அந்த மலரை அணிசெய்தன. 'மணிக்கொடி குறைந்த விலையில் புத்தகங்கள் வெளியிடுவது என்ற திட்டத்துடன் நவயுகப் பிரசுராலயம் என்ற பெயரில் பதிப்பகம் தொடங்கியிருந்தது, ஏ.என். சிவராமன் எழுதிய மாகாண சுயாட்சி என்ற அரசியல் நூல் முதலாவது வெளியீடாக எட்டனா விலையில் வந்தது. அண்ணாச்சி ராஜகோபாலகிருஷ்ணன் அதை வாங்கி வந்தார். படித்து விட்டு எங்களுக்கும் படிக்கத் தந்தார். வரா. தமிழாக்கிய பண்டித ஜவகர்லால் நேருவின் சுயசரிதத்தையும் அவர் கொடுத்தார். அவருக்கு அரசியலில் ஆர்வம் ஏற்பட்டிருந்தது. ஜெயப்பிரகாஷ் நாராயணன் நூல்களை வாங்கிப் படித்தார். அவையும் நாங்கள் படிப்பதற்காகக் கிடைத்தான். கலியாணி அண்ணாச்சியின் இல்லற வாழ்க்கை அமைதியும் ஆனந்தமும் நிறைந்ததாக அமையவில்லை. அண்ணியாக வீட்டுக்கு வந்தவள் சீக்காளியாகவும் சிடுசிடுத்த குணம் உடையவளாகவும் இருந்தாள். அடிக்கடி திருநெல்வேலிக்குப் போய் அம்மா வீட்டிலேயே நிலைபெற்ற நினைவுகள் : 181