பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-1.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தங்குவதை வழக்கமாகக் கொண்டாள். அப்பா அம்மாவின் செல்லமாக வளர்ந்த பெண். மூத்த மகள். அவளுக்கு ஒரு தங்கை இருந்தாள். மிக இளையவள். அதனால் பெற்றோரும் அவள் விருப்பப்படியே இருக்கட்டும் என்று அங்கீகரித்தார்கள். இதன் மூலம் அண்ணாச்சியின் வாழ்க்கை தான் சிக்கல்கள் சிரமங்களுக்கு உரியதாயிற்று. தம்பி முருகேசன் வாழ்க்கையும் சிரமங்கள் நிறைந்ததாகவே இருந்தது. பாளையங்கோட்டையில் அந்தோணியார் பள்ளியில் அவன் ஐந்தாவது படித்து முடித்திருந்தான். மேற்கொண்டு ஆறாம் வகுப்பில் சேரவேண்டும். அதற்காகத் தினம் திருநெல்வேலி ஜங்ஷன் இந்து உயர்நிலைப் பள்ளிக்குப் போய் வரவேண்டிய நிலைமை ஏற்பட்டிருந்தது. ராஜவல்லிபுரத்தில், ஐந்து வகுப்புகளைக் கொண்ட ஆரம்பப் பள்ளி தான் இருந்தது. மேற்கொண்டு படிக்க வேண்டிய சில பிள்ளைகள் ஆற்றங்கரைப் பாதையில் நடந்து அருவங்குளம் என்கிற நாரணம்மாள் புரம் நடுநிலைப் பள்ளியில் சேர்ந்து கற்றார்கள். அங்கு எட்டாவது வகுப்பு முடிய இருந்தது. அநேக பிள்ளைகள் திருநெல்வேலி ஜங்ஷனுக்குப் போய் அங்குள்ள இந்து உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்து கற்றார்கள். சிலபேர் ஜங்ஷனுக்கும் டவுணுக்கும் நடுவில், வயல்களின் மத்தியில் அமைந்திருந்த சி.எம்.எஸ்.பள்ளியில் கல்விகற்றார்கள். அது வயல்காட்டுப் பள்ளிக்கூடம் என்றும்பெயர் பெற்றிருந்தது. ஜங்ஷனுக்கு ரயிலில் தான் போய் வரவேண்டும். காலையில் எட்டு மணிக்கு ஒரு ரயில் ஓடியது. அது தான் வசதியாக இருக்கும். அதன் பிறகு பதினொன்றரை மணிக்குத்தான் ரயில் பள்ளிக்கூடத்தில் பத்து மணிக்கு வகுப்புகள் தொடங்கிவிடும். ஆகவே எட்டு மணி ரயிலில் போயாக வேண்டும். எட்டே காலுக்கு அது ஜங்ஷன் சேர்ந்துவிடும். பையன்கள் வெட்டிப் பொழுது போக்குவதற்கு நிறைய நேரமிருந்தது. காலை எட்டு மணி ரயிலைப் பிடிப்பதற்கு அதிகாலை ஏழுமனிக்கு வீட்டைவிட்டுக் கிளம்பியாக வேண்டும். இரண்டு மைல் தூரம் நடக்க வேண்டுமே ஆகவே ஆறு மணிக்கு முன்னரே எழுந்து, குளித்துத் தயாராகிக் காலை உணவை உட்கொண்டுவிட்டு, டிபன் பாத்திரத்தில் மதிய உணவை எடுத்துக் கொண்டு பையன்கள் ஏழுமணிவாக்கில் புறப்பட்டுவிடுவார்கள். ரோடு சுற்றிப் போவதைவிட, வயல்களின் 182 : வல்லிக்கண்ணன்