பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-1.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வரப்புகளில் நடந்து போனால் தூரம் குறையும் என்ற எண்ணத்தில் பையன்கள் அவ்விதமே செய்வர். ஒரு மைல் தூர எல்லையில் ரோடு மீது ஏறி, ஒழுங்கான பாதையில் நடப்பார்கள். வயல்களில் பயிர் இல்லாத மாதங்களில் நடந்து போவதற்கு சிறிது வசதியாக இருக்கும் நெல்பயிர் வளர்கின்ற காலத்தில் வரப்புகளில் சேறும் தண்ணீரும் கலந்து வழுக்கும் மாலையிலும் அதே மாதிரி நடந்து வரவேண்டும். மாலையில் ஐந்தரை மணிக்குத் தான் ரயில் இருந்தது. அதில் வந்து தாழையூத்து நிலையத்தில் இறங்கி, பையன்கள் மெதுவாக நடந்து வந்து வீடு சேர்வதற்குள் அந்தி சாய்ந்துவிடும் வந்த களைப்பு இரவில் படிக்க உற்சாகம் இராது. சீக்கிரமே தூங்கத் தான் தோன்றும் மழை நாள்கள் என்றால் சிரமங்கள் அதிகரிக்கும். முருகேசனுடன் ஐந்தாறு பையன்கள் சேர்ந்து போய் சேர்ந்தே வந்தார்கள். விளை யாட்டும் வேடிக்கைப் பேச்சும், குறும்புத்தனமும் வம்பளப்புமாக அவர்கள் பயணம் தொடரும் படிப்பில் ஆர்வமும் அக்கறையும் உடையவர்கள் ஒன்றிருவர் தான் இருந்தனர். முருகேசன் அவர்களில் ஒருவனாக இருக்கவில்லை. பள்ளிக்கூடம் போய் படித்து வருவது அவனுக்கு ஒரு தண்டனை போல் தோன்றியது. அவன் ஜாலி பிரதர் ரகம் அதனால் ஏழாம் வகுப்பு வந்ததும் அவன் படிப்பைத் தொடர ஆசைப்படவில்லை. படித்தது போதும் என்று வீட்டில் இருந்து விட்டான். இந்நிலையில், நாங்கள் ராஜவல்லிபுரத்தில் வசிக்க வந்து பதினெட்டு மாதங்கள் ஒடிய பிறகு நான் அவ்வூரை விட்டு வெளியேற வேண்டிய அவசியம் ஏற்பட்டது. அவ்வூர்காரர், எங்கள் உறவினர் ஒருவர். அரசு வேளாண்மைத்துறை உயர் அலுவலராகப் பணிபுரிந்து கொண்டிருந்தவர், எங்கள் குடும்பத்துக்கு உதவி புரிய முன் வந்தார். அப்போது அவர் மதுரையில் தங்கி உத்தியோகம் பார்த்துக் கொண்டிருந்தார். ராமநாதபுரம் ஜில்லாவில் புதிதாகச் சில விவசாய அபிவிருத்தி அலுவலர் ஆபீஸ்கள் துவக்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அத்திட்டத்தின்படி, பரமக்குடியில் திறக்கப்பட்ட அலுவலகத்துக்கு குமாஸ்தா தேவைப்பட்டது. அந்த வேலை எனக்குக் கிடைக்கும்படி அவர் முயன்று ஆவன செய்து முடித்தார். - நிலைபெற்ற நினைவுகள் : 183