பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-1.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பரமக்குடி சென்று, அங்கு துவக்கப் பெற்றுள்ள விவசாய டெமான்ஸ்ட்ரேட்டர் ஆபீசில் கிளார்க்காகச் சேருவதற்கான உத்தரவு 1937 நவம்பரில் எனக்குக் கிடைத்தது. அதற்கான முன்னேற்பாடுகள் பலவும் வேகமாகச் செய்துமுடிக்கப்பட்டன. முதலில் மதுரை போகவேண்டும் ரயிலில் தான். அங்கிருந்து வண்டி மாற்றி, ராமேஸ்வரம் பாதையில் பயணம் செய்து பரமக்குடி சேர வேண்டும். அந்நிலையில் எங்களுக்கு அது தூரதொலை தான். சிறுவனான நான், தனியே எங்கும் பயணம் செய்துபோய் அனுபவம் பெற்றிராதவன், நெடுந்தொலை சென்று தனியாக எப்படித் தான் காலம் கழிப்பானோ என்ற பயமும் கவலையும் அம்மாவுக்கும் அண்ணன் நெடுந்துாரம் என்ன சிறு தொலைவு கூடப் பயணம் போயிராத சிறுவன் நான் ரயிலில் கங்கை கொண்டான் கடந்து மணியாச்சி தாண்டி அதற்கப்புறம் போனதேயில்லை. நான் பள்ளியில் படித்த நாள்களில், தமிழாசிரியரும் ஆங்கில ஆசிரியரும் நான் செய்த நீண்ட துர ரயில்பயணம் என்ற தலைப்பில் வியாசம் எழுதச் சொல்வார்கள். நான் ரயில் பயணம் போயிருந்தால் அல்லவா சுவாரசியமாக எழுத முடியும் அதற்காக வியாசம் எழுதாமல் வெறும் நோட்டை வாத்தியாரிடம் கொடுக்க முடியுமா? திருச்செந்தூர் போய் வந்த பயணம் என்று ஆங்கிலத்தில் கட்டுரை எழுதிக் கொடுத்தேன். திருச்செந்துரர் போனது தானா நீ செய்த நீண்ட பயணம் என்று கேலியாகக் குறிப்பிட்டார் ஆசிரியர். கல்கத்தா போனது பற்றி ஒரு மாணவன் எழுதியிருந்தான். பம்பாய் போய் அம் மாநகரைச் சுற்றிப் பார்த்தது பற்றி ஒரு பையன் அளந்திருந்தான். நானோ போகாத திருச்செந்தூர் பயணம் பற்றி கற்பனைச் சித்திரம் தீட்டியிருந்தேன். திருச்செந்தூருக்குக் கூடப் போய்வர வசதியிருந்ததில்லை. சின்ன வயசில், அப்பாவோடு போனதுதான். அதன் பிறகு அந்த ஊருக்குப் போகக்கூட வாய்ப்பும் வசதியும் இருந்ததில்லை. நான் செங்கோட்டை ஊருக்குப் போய் வந்ததாகத் தமிழ் வியாசம் எழுதிக் கொடுத்தேன். இரண்டு பக்கங்களில். இது போதாது; செங்கோட்டை ஊரின் சிறப்புகள்; அங்கே உள்ள கடைவீதி, சுற்றுச்சூழல் காட்சிகள், மற்றும் விசேஷமான சமாச்சாரங்கள் பற்றி எழுத வேண்டும் என்று தமிழாசிரியர் போதித்தார். 184 38 வல்லிக்கண்ணன்