பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-1.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டிமான்ஸ்ட்ரேட்டர் கணேசய்யர் இந்த சலுகைகளை நன்கு பயன்படுத்தினார். உத்தியோக ரீதியில் அவர் பரமக்குடியில் தங்கி யிருந்ததை விட, திருமங்கலத்தில் விடுப்பில் கழித்த நாள்களே அதிகம் அவர் நீண்ட கால விடுப்பில் போனால், அவருக்கு மாற்றாக பக்கத்து முதுகுளத்தூர் டிமான்ஸ்ட்ரேட்டர், அல்லது ராமநாதபுரம் டிமான்ஸ்ட்ரேட்டரை கூடுதல் பொறுப்பில் - இன் சார்ஜ் ஆக - பரமக்குடி அலுவலையும் கவனிக்கும்படி நியமிப்பார்கள். அவர்கள் முறையைக் கழிக்கிற விதமாக அல்லது ஒப்பேத்துகிற தன்மையில் மாதத்தில் ஒருநாள் எப்பவாவது வந்து, எதையாவது செய்துவிட்டுப் போவார்கள். முதுகுளத்தூர் அதிகாரி பரவால்லே ரகம் பகல் நேரத்தில் வந்து, பணிபுரிந்து விட்டு சாயங்காலம் திரும்பிப்போய் விடுவார். ராமநாதபுரம் டிமான்ஸ்ட்ரேட்டர் மாலை 5 மணி ரயிலில் தான் வருவார். இரவில் உட்கார்ந்து தபால்களை கவனிப்பார். பதில் எழுதச்செய்வார். இரவு 9 மணி ரயிலில் ராமநாதபுரம் திரும்பிவிடுவார். மாலையில் சுதந்திரமாக ஆற்றுப்படுகையில் உலா போவதைத் தடுக்கும் விதத்தில் அவர் அப்படி வேலை செய்ய வந்து விடுகிறாரே என்று எனக்கு எரிச்சலாக இருக்கும். பொதுவாக, டிமான்ஸ்ட்ரேட்டர் ஆபீசில் அந்தக் காலத்தில் குமாஸ்தாவுக்கு அதிகமான வேலை இருந்ததில்லை. அதிலும், புதிதாகத் திறக்கப்பட்ட பரமக்குடி அலுவலகத்தில் வேலை என்பதே இருந்த தில்லை. தபாலில் வரக் கூடிய ஒன்றிரண்டு கடிதங்களை பைல் பண்ண வேண்டிய (கோப்பில் இணைக்க வேண்டிய) வேலை தான். மற்றப்படி சும்மா இருக்கவேண்டியதுதான். சோம்பேறிச் சுப்பர்களுக்கு சுகமான வேலை. எனக்கு படிப்பதற்கும் எழுதுவதற்கும் மிக வசதியாக இருந்தது. அது. ஆபீசுக்கு சற்று தள்ளி வைகை ஆறு. நவம்பர், டிசம்பர் மாதங்களில் தண்ணிர் தாராளமாக ஓடியது. குளிப்பதற்கு மிகச் சவுகரியமாக இருந்தது. ஆற்றில் தண்ணிர் ஓடாத வறண்ட காலங்களில், ஒடுகால் என்கிற அமைப்பு குளிப்பதற்கு உதவியது. மணலில் வரிசையாக மூன்று பள்ளங்கள், இடம் விட்டு, தள்ளித் தள்ளி வெட்டப்பட்டிருக்கும். 188 : வல்லிக்கண்ணன்