பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-1.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நானும் ராஜவல்லிபுரம் கிருஷ்ணசுவாமி என்ற பெயரிலிருந்து வல்லிக்கண்ணன் என்ற பெயரை அமைக்கலாம் என்.று எண்ணினேன். அந்நாள்களில் இந்தி மொழி எதிர்ப்பும் தனித்தமிழ் வளர்ச்சியும் மேலோங்கி வந்தன. வடமொழிப் பெயர்களை தமிழ்ப் பெயர்களாக மாற்றுவது பற்றிய அறிவிப்புகள் வந்து கொண்டிருந்தன. அப்படி எந்த எந்தப் பிறசொல் பெயர்களுக்கு என்ன என்ன தமிழ்ப் பெயர்கள் வைக்கலாம் என்று பட்டியலிட்டு, திருநெல்வேலி சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் ஒரு சிறு பிரசுரம் வெளியிட்டிருந்தது. அதிலும், கிருஷ்ணன், கிருஷ்ணசுவாமி, கிருஷ்ணமூர்த்தி என்ற பெயர் உடையவர்கள் கண்ணன் என்று தங்கள் பெயரை மாற்றி அமைக்கலாம் என்ற விளக்கம் காணப்பட்டது. ஆகவே, ராஜவல்லிபுரத்தில் உள்ள வல்லியையும் கிருஷ்ணனுக்கான கண்ணனையும் சேர்த்து வல்லிக்கண்ணன் என்ற பெயரை நான் தேர்ந்து கொண்டேன். 'பாரதசக்தியில் வெளியான விறுவிறுப்புக் கட்டுரை ஒன்றில் தான் முதன்முதலாக இந்தப் புனைபெயர் இடம் பெற்றது. இந்தி எதிர்ப்பு நாட்டில் வேகமாகப் பரவி வந்தது. பெரியார் ஈ.வே.ராமசாமியும் அவர் கட்சிப் பேச்சாளர்களும் பரமக்குடிக்கும் வந்து சொற்பொழிவுகள் ஆற்றினார்கள். அக்காலத்தில்தான் சுவாமி வேதாசலம் என்ற மறைமலை அடிகளின் தனித்தமிழ் நூல்கள் பரவலாக எங்கும் வாசிக்கப்படலாயின. நண்பர் நித்தியானந்தம் மறைமலை அடிகள் நூல்கள் பலவற்றையும் இரவலாகவும் விலைகொடுத்து வாங்கியும் ஆர்வமாகப் படிக்கலானார். எனக்கும் அவை படிக்கக் கிடைத்தன. கடிதங்கள் வடிவில் அவர் எழுதியிருந்த நாவலான கோகிலாம்பாள் கடிதங்கள் சிறப்பானதாகத் தோன்றியது எனக்கு. அந் நாள்களில் நான் இந்தி மொழியும் கற்றேன். ஹிந்தி ஸ்வபோதினி என்று தானாகவே இந்தி கற்க உதவும் நூல் வெகுவாகப் பயன்பட்டது. இந்தி பிரசார சபை வெளியிட்ட பாடப்புத்தகங்கள், சிறுசிறுகதை நூல்கள் பலவும் வாங்கிப் படித்தேன். ப்ராத் மிக் எனும் ஆரம்பப் பரீட்சை முதலாவதாக எழுத வேண்டிய தேர்வு ஆகும். அடுத்தது 'மத்யமா? ஆரம்பப் பரீட்சை எழுதாமலே, நேரடியாக மத்யமா தேர்வு நிலைபெற்ற நினைவுகள் 8 197