பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-1.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எழுதலாம் என்ற வசதியும் இருந்தது. எனவே நான் நேராக மத்யமா எழுதினேன். தேர்வு பெற்றதற்கான சான்றிதழும் கிடைக்கப் பெற்றேன். அடுத்து ராஷ்ட்ர பாஷா தேர்வு எழுதலாம். - ஆனால், நான் பரீட்சை எழுதும் நோக்கமின்றி இந்தி நூல்களைப் படிப்பதில் ஆர்வம் கொண்டேன். பிரேம் சந்த் கதைகள் முதலிய புத்தகங்கள் படித்தேன். பேச்சைன் ஷர்மா என்றொரு எழுத்தாளர், 'உக்ர என்று புனைபெயரில், வேகமும் விறுவிறுப்பும் நிறைந்த நடையில் கட்டுரைகள் எழுதினார். அவை எனக்குப் பிடித்திருந்தன. 'உக்ரவின் பணத்தின் சக்தி பற்றிய கட்டுரையையும், வேறொன்றை யும் தமிழாக்கினேன். பிரேம் சந்த் கதைகள் சிலவற்றையும் மொழி பெயர்த்தேன். ஷாந்தி குடீர் என்றொரு பெரிய நாவலை (ஆசிரியர் பெயர் நினைவில்லை) படித்தேன். அது தான் நான் படித்த கடைசி இந்திப் புத்தகம். அதன் பிறகு நான் இந்தி நூல்கள் படிப்பதில் ஆர்வம் கொள்ளவில்லை. தமிழ்ப் புத்தகங்களும் ஆங்கில நூல்களும் மிக அதிகமாகவே படிக்க வேண்டி யிருந்தன. அதனால் இந்தி படிப்பதை விட்டு விட்டேன். காலஓட்டத்தில், நான் கற்ற இந்தியும் மறந்தே போய்விட்டது. அதற்காக நான் வருத்தப் படவுமில்லை. ஆபீசில் முத்துக் கோனார் என்ற இளைஞர் மெசஞ்சராகப் பொறுப்பேற்றார். ஆரம்பம் முதலே சுப்பையா (தேவர்) என்பவர் தான் மேஸ்திரியாக வேலை பார்த்து வந்தார். நான் பரமக்குடியில் இருந்தவரையில் இவ் இருவருமே பணிபுரிந்து வந்தனர். கந்தசுவாமி மாறிப் போய் சில மாதங்கள் சென்றதும், கோவிந்த குரூப் என்பவர் டிமான்ஸ்ட்ரேட்டராக வந்து சேர்ந்தார். அவர் தோற்றத்தில் முதியவர் போல் தென்பட்டாலும் வயது குறைந்தவர் தான். பரமக்குடிக்கு வந்தபிறகு தான் அவர் விடுப்பில் சொந்த ஊர் போய் திருமணம் புரிந்த கொண்டார். மனைவியையும் உடன் அழைத்து வந்து, அவ்வூரில் வசதியான வீடு பார்த்துக் குடும்பம் நடத்தினார். நல்ல பரமக்குடிக்கு வந்து பொறுப்பேற்ற டிமான்ஸ்ட்ரேட்டர்கள் பலரும் என்னிடம் அன்பும் பிரியமுமாகவே நடந்து வந்தனர். அதிகாரிகள் மீது குறை கூறுவதற்கோ, வேலையில் சலிப்பும் வெறுப்பும் கொள்வதற்கோ எவ்விதக் காரணமும் இருந்ததில்லை. 198 : வல்லிக்கண்ணன்