பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-1.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இடது கைவிரல்களால் நடராஜர் கன்னத்தைக் கிள்ளி, விரல்களை முத்தமிட்டுக் கொண்டார். அப்படி விரல்கள் கிள்ளிய அடையாளம் சிலையில் நன்கு பதிந்துவிட்டது. அது இப்பவும் காணப்படுகிறது. இது பக்தர்கள் சொல்கிற விவரம். செப்பறைக் கோயில் ஆற்றினுள் மணல்படுகையில் அமைந்திருந்த போது, ஒருசமயம் பெரும்வெள்ளம் வந்து அதைச் சிதைத்துச் சின்ன பின்னப்படுத்தி விட்டது அல்லவா? அதை ஒட்டியும் ஊர்வாசிகளால் நெடுநாள் வரை ஒரு கதை சொல்லப்பட்டு வந்தது. ஆற்றின் தென்கரை மீது நீரோட்டத்தின் வளைவினை ஒட்டி, சிறு குன்று ஒன்று நிற்கிறது. செம்மண்ணும் வெண்நிறப் பாறாங்கற்களும் அடுக்கடுக்காக அமைந்து காணப்படுவது. அதை வெள்ளிமலை என்று குறிப்பிடுவர். வெள்ளிமலையின் அடிவாரத்தில் ஆற்றில் ஆழம் அதிகம் கொண்ட கசம் ஒன்று இருந்தது. அதனுள் நீர்ச்சுழி உண்டு என்பர். கசத்தில் இறங்கியவர்கள். அல்லது விழுந்து விடுகிறவர்கள், சுழியினால் இழுக்கப் பட்டு கசத்தினுள் மறைந்து மாண்டு போவார்கள். அப்படி வருடத்துக்கு இரண்டு மூன்று பேர் இறப்பது விபத்தாக நிகழ்ந்தது. அதனால் அந்த நீலகண்டன் கசம் என்றாலே ஜனங்களுக்குப் பெரும் பயம், ஆற்று வெள்ளம் செப்பறைக் கோயிலைத் தகர்த்து, அங்கிருந்த பொருள்கள் பலவற்றையும் அடித்துச் சென்றுவிட்டது. அப்படிப் அந்தத் தேர் கசத்தின் ஆழத்தில் சிக்கிப் புதைந்து கிடக்கிறது: அதை பூதங்கள் பாதுகாக்கின்றன என்று ராஜவல்லிபுரம் வாசிகள் நம்பினார்கள். தினசரி பகல் பன்னிரண்டு மணிக்கு, நட்ட நடு மத்தியானத்திலே, பூதங்கள் வெள்ளித்தேரை அசைத்துக் குலுக்கி விளையாடுகின்றன, ஆற்றில் குளித்துக் கொண்டிருப்பவர்களுக்கு தேர் மணிகளின் கலகல ஒசை தெளிவாகக் கேட்கும் என்று அவர்கள் கதைகட்டிப் பரப்பினார்கள். அப்படி மணிஓசையை நன்கு கேட்டதாகச் சிலர் உறுதியாகச் சொன்னார்கள். அதனால் மத்தியான நேரத்தில், உச்சிப்படை வெயில் பொழுதில், ஆற்றில் குளிப்பதற்கு சாதாரண ஜனங்கள் பயந்தார்கள். மணிஓசையை கேட்கவேண்டும் என்றே தைரியசாலிகள் ஒன்றிரண்டு 20 % வல்லிக்கண்ணன்