பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-1.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தீண்டாமை உணர்வை அகற்றுவதற்காக, சமபந்தி போஜன. நடவடிக்கைகளில் கவனம் செலுத்தியது. பரமக்குடியிலும் காங்கிரஸ் செல்வாக்குப் பெற்றிருந்தது. நெசவுத் தொழிலில் ஈடுபட்ட செளராஷ்டிரர்கள் அங்கு மிகுதியாக இருந்தார்கள் மட்டி பனியன் என்று ஒருவகை மேலாடை உற்பத்தியில் அந்த ஊர் பெயர்பெற்றிருந்தது. கோவிந்தன் என்கிற மட்டி பனியன் உற்பத்தித் தொழிலதிபர் காங்கிரஸ் பிரமுகராகச் செயலாற்றிக் கொண்டிருந்தார். அவரது ஏற்பாட்டின்படி பரமக்குடியில், கடைத்தெருவை ஒட்டிய நீண்ட பெரிய ரோடில் பந்தி பரப்பி, சமபந்தி போஜனம் ஒருமுறை வெற்றிகரமாக நடைபெற்றது. அது பற்றி காங்கிரஸ்காரர்கள் பலரும் பெருமைப்பட்டார்கள் வெகுநாள் பேசி மகிழ்ந்தார்கள். பரமக்குடி மற்றொரு வகையிலும் கவனிப்பு பெற்றிருந்தது. அந்நாள்களில் திரைப்படங்களில் நடித்துப் புகழ் பெற்றிருந்த பி. எஸ். சிவபாக்கியம் என்ற நடிகை பரமக்குடியை சேர்ந்தவர். அங்கு பிரதானமான இடத்தில், வசதியான வீடு ஒன்று கட்டி வசித்து வந்தார். நகைச்சுவைப் பாத்திரங்களில் நடித்து ஹாஸ்யநடிகை என்று பெயர் அடைந்திருந்தார் அவர். அக்காலத்தில் படங்களில் நடிகர் நடிகையரே பாட்டுக்கள் பாடி நடிப்பார்கள். பின்னணி இசைப்பாடல் (பிளே-பேக் சிங்கிங்) என்று ஒலிப்பதிவு செய்யும் முறை அப்போது நடைமுறைக்கு வந்திருக்கவில்லை. பி.எஸ். சிவபாக்கியம் பாடிய பாடல்கள் கவர்ச்சிகரமாக இருந்தன. சில சர்ச்சைக்கும் எதிர்ப்புகளுக்கும் இடமளித்தன. நான் மதிச்சியத்தில் குடியிருக்கிறது. மதுரையிலே மோரு விக்கிறது என்று நீட்டி இழுத்து உரிய அங்கசேஷ்டைகளுடன் பாடிய ஒரு பாட்டு அவருக்கு மிகுந்த பெயர் வாங்கிக்கொடுத்திருந்தது. அதேபோல, வண்ணான் வந்தானே! - வண்ணாரச் சின்னான் வந்தானே - பின்னாலே வண்ணாத்தி வந்தாளே! என்று நீட்டி இழுத்துப் பாடிய பாடல் ఫ్రాణిறு வழுக்குப் பாறையிலே வண்ணானும் வண்ணாத்தியும். ஹாங்... வண்ணான் வண்ணாத்தியை... ஹஅம்ங்.." என்று ஒலிக்குறிப்புகளோடும் முகச்சுளிப்புகளோடும் அவர் பாடிய முறை பரபரப்பு ஏற்படுத்தியது. உள்ளுறை பொருள் வைத்து அவர் நிலைபெற்ற நினைவுகள் 3 201