பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-1.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தண்டனை மாதிரி, இப்படி தூராதொலை ஊர் ஆபீசுக்கு அவர் மாற்றப்பட்டிருந்தார். அவர் பூரீவைகுண்டம் ஊர்காரர்தான். இளைஞர் மனைவியோடும் கைக்குழந்தையோடும் சொந்த ஊரில் சொந்தவீட்டில் வசதியாக வாழ்ந்து கொண்டிருந்தார். சொந்த ஊரிலேயே அரசாங்க உத்தியோகம் என்ற நிம்மதி அவருக்கும் அவர் குடும்பத்தாருக்கும் இருந்தது. அவர் தம்பி, தம்பி மனைவி, அம்மா எல்லோரும் கூடி வாழ்ந்த பெரிய குடும்பம் ,fتيH( وايي பூரீவைகுண்டம் ஆபீஸ் மேலதிகாரிக்கு (டிமான்ஸ்ட்ரேட்டர்) அவரை பிடிக்காமல் போயிற்று. அவரது வேலைகளில், போக்கில் எல்லாம் குறைகண்டார். மேலிடத்துக்கு ரிப்போர்ட்டுகள் அனுப்பிக் கொண்டேயிருந்தார். அதன் பயனாக அப்பாவி சாம்பசிவம் பரமக்குடி ஆபீசுக்கு மாற்றப் பெற்றார். பரமக்குடிக்கு வந்து சேர்ந்த சாம்பசிவம், பூரீவைகுண்டத்தில் அவர் வீட்டோடு-குடும்பத்தோடு- வசதியாக வாழ்ந்து கொண்டிருந்ததையும், அதைப் பிடிக்காத அதிகாரி இப்படி வெகுதூரத்தில் உள்ள ஊருக்கு தன்னை மாற்றச் செய்ததையும், இங்கு தனியாக வசதிகள் குறைந்த இடத்தில் வந்து சிரமப்பட நேர்ந்து விட்டதையும் பற்றிப் புலம்பித் தீர்த்தார். பூரீவைகுண்டம் அதிகாரியின் போக்குகள் சிறுமைக்குணங்கள் பற்றி எல்லாம் சொன்னார். அவருக்குக் கீழே வேலை பார்க்கிறவர்களை- கிளார்க்கு மேஸ்திரி, மெசஞ்சர் எல்லோரையுமே - அவர் சதா குறைகூறிக்கொண்டு தான் இருப்பார். மேலே ரிப்போர்ட் எழுதி அவர்களுக்கு தண்டனை வாங்கிக் கொடுப்பதில் அவருக்கு ஒரு சந்தோஷம் இரண்டு மேஸ்திரிகளுக்கு வேலைபோகும்படி செய்ததை அவர் பெருமையாகச் சொல்லிக் கொள்வார் என்றும் சாம்பசிவம் கூறினார். அந்த டிமான்ஸ்ட்ரேட்டர் பற்றி ஏற்கனவே பரமக்குடி டிமான்ஸ்ட் ரேட்டர் கணேசய்யரும் முதுகுளத்தூர் டிமான்ஸ்ட்ரேட்டரும், அவர் நண்பரும் ஒரு சமயம் பரிகாசமாகப் பேசிக் கொண்டதை நான் கேட்டிருந்தேன். அத்துறை சேர்ந்த பல அதிகாரிகள் பற்றியும் பேசிப் பொழுது போக்கிய அவர்கள், ராமநாதபுரம் ஆபீசில் ஒரு சமயம் பணிபுரிந்த பின்னர் பூரீவை குண்டம் ஊருக்குப் போய்விட்ட நிலைபெற்ற நினைவுகள் 3 203