பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-1.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அந்தோணி என்பவர் பற்றியும் பேசி மகிழ்ந்தார்கள். அந்தோணி என்ற பெயர் தனக்குத் தாழ்வு உணர்ச்சி தருவதாக எண்ணிய அவர் திடீரென்று தனது பெயரை அந்தோணிப் பிள்ளை என்று ஆக்கிக் கொண்டதையும், அவ்வாறே கையெழுத்திட்டுக் கடிதங்கள் அனுப்பியதையும் சொல்லிச் சிரித்தார்கள் அவர்கள். அவரது சிறுமைக்குணங்கள் சிலவற்றையும் குறிப்பிட்டுச் சொன்னார்கள். அத்தகைய குணச்சிறப்புகள் பெற்றிருந்த அதிகாரியின் கீழ் பணிபுரிவதற்கு நான் போயாக வேண்டிய கட்டாயத்தை காலம் ஏற்படுத்திவிட்டது: அதிகாரி எப்பேர்ப்பட்டவராக இருந்தால் என்ன! நான் என் கடமைகளை ஒழுங்காகச் செய்ய வேண்டும் அதுதான் முக்கியம் என்று எண்ணினேன் நான். பரமக்குடியை விட்டுப் புறப்படுவதற்கு முன்னரே, லோகசக்தி ஏஜன்டைப் பார்த்து, லோகசக்தி வெளியீடுகளைப் பெற்றிருந்தேன். நான்கணா, எட்டனா விலையுள்ள சின்னச் சின்னப் புத்தகங்கள் அவை, சுமார் அறுபது இருந்தன. அவற்றில் சிலவற்றை பரமக்குடி நண்பர்களுக்கு அன்பளிப்பாக வழங்கினேன். அத்தகைய பிரசுரங்களை விற்பனை செய்வது கஷ்டம் தான். அவற்றை லோக சக்தி ஆபீசுக்கே அனுப்பிவைக்கவும் மனம் வரவில்லை. திருநெல்வேலியில் அவற்றை விற்பதற்கு ஏற்பாடு செய்ய முடியுமா என்று பார்க்கலாம் என்று எண்ணினேன். புத்தகங்களின் விலையை கணக்கிட்டு, கழிவு (கமிஷன்) தொகை நீக்கி, வந்த சிறுதொகையை லோகசக்தி ஆபீசுக்கு அனுப்பி வைத்தேன். பரமக்குடிக்கு வந்த இரண்டு வருடங்களுக்குப் பிறகு ஒரு நாள் அந்த ஊருக்குக் கும்பிடு போட்டுவிட்டு ரயிலேறினேன். அனுபவமில்லாத ஒரு மாணவன் நிலையிலேயே நான் அந்த ஊருக்கு வந்தேன். பலவிதமான மனிதர்களைத் தெரிந்து கொள்ள வாய்ப்பும். ஏதோ சிறிது அனுபவமும் பெறுவதற்கு அந்த ஊர் எனக்கு உதவியது. 204 : வல்லிக்கண்ணன்