பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-1.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

一部12器一 பூரீவைகுண்டம் ஏற்கனவே எனக்கு அறிமுகமான ஊர்தான். எனது ஆறு ஏழாவது வயதில் நாங்கள் பெருங்குளத்தில் வசித்தபோது அநேக தடவைகள் பூரீவைகுண்டம் வரவும், அந்த ஊரை ஓரளவு தெரிந்து கொள்ளவும் வாய்ப்புகள் கிட்டியிருந்தன. இப்போது அங்கேயே தங்கியிருந்து பணிபுரிய நேரிட்டது. பூரீவைகுண்டம் ரயில்வே ஸ்டேஷனுக்கும் ஊருக்கும் ஒரு மைலுக்கும் அதிகமான தூரம் இருந்தது. ரயில்நிலையம் புதுக் குடிச்சத்திரம் என்ற சிற்றுரை அடுத்திருந்தது. அதைக் கடந்ததும் தாமிரவர்ணி ஆற்றுப்பாலம் மீதாக வந்து ஊரை அடைய வேண்டும். நான் பெட்டியுடன் ரயில்நிலையத்திலிருந்து வெளிப்பட்டதும், அங்கே நின்ற வண்டிக்காரர்களில் ஒருவர் - நடுவயதுக்காரர் - என்னை அணுகி, எங்கே போகணும்? என்று விசாரித்தார். நான் விவசாய ஆபீசுக்கு என்று சொன்னதும், நீங்க எங்கே இருந்து வாlக என்று கேட்டார். பரமக்குடியிலிருந்து என்று கூறியதும், சாம்பசிவ ஐயாவுக்கு பதிலாக வாற கிளார்க்கு நீங்கதானா? சரி, வண்டியிலே ஏறுங்க என்றார். வண்டி பெரியது தான். மாடுகளும் மிடுக்காக இருந்தன. என் பேரு கந்தன். விவசாய ஆபீசுக்கு வழக்கமா நான் தான் வண்டி ஒட்டுறது. ஸ்டேஷனிலிருந்து கொண்டு போக வேண்டிய சரக்குகள், ரயிலுக்கு அனுப்ப வேண்டிய சாமான்கள் இதுகளை நான் தான் கொண்டு போவேன் என்று அவர் தன்னை அறிமுகம் செய்து கொண்டார். வண்டியில் போகிறபோதே, சாம்பசிவன் பற்றியும், டிமான்ஸ்ட் ரேட்டர் அந்தோணி பிள்ளைக்கும் அவருக்கும் ஒத்துப்போகாதது பற்றியும் சொன்னார். சாம்பசிவன் வீடுபோகிற வழியிலேதான் இருக்கு என்றும் தெரிவித்தார். அவர் வீட்டுக்கு ஏதாவது செய்தி சொல்லி அனுப்பினாரா என்று கேட்டார். - குழந்தைக்காக ஒரு சட்டை வாங்கிக் கொடுத்திருக்கிறார். ஒரு கடிதமும் கொடுத்தனுப்பியிருக்கிறார். நல்லபடியாக இருப்பதாகவும், இடம் எல்லாம் வசதியாக இருப்பதாகவும் சொல்லும்படியும் கேட்டுக்கொண்டார் என்று தெரிவித்தேன். நிலைபெற்ற நினைவுகள் 3 205