பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-1.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆற்றுப் பாலம் கடந்து, ஊர் எல்லையினுள் புகுந்து, கடைத் தெருவில் வண்டி போய் ஒரு இடத்தில் திரும்பியது. அங்கே வண்டியை நிறுத்தி, அதோ அந்த விடு தான் சாம்பசிவன் பிள்ளை வீடு, அங்கே நிற்பது தான் அவரு தம்பி. நீங்க சட்டையையும் கடுதாசியையும் கொடுங்க அவர்கிட்டே கொடுத்திடுறேன். நீங்க வர வேண்டியதில்லை என்று கந்தன் கூறினார். -, நான் அவ்வாறே செய்தேன். அவர் வண்டியை விட்டு இறங்கி, அந்த வீட்டுக்குச் சென்று படிக்கட்டின் மீதேறி, திண்ணை மீதிருந்தவரிடம் சட்டையையும் கடிதத்தையும் சொடுத்தார். என்னைப் பற்றி அவர் விவரம் சொல்லியிருக்க வேண்டும். தம்பி என் பக்கம் பார்த்தார். வீட்டினுள்ளிருந்து வந்த ஒரு பெண்ணும் ஒரு பெரிய அம்மாளும், வண்டிக்குள்ளிருந்த என்னை கவனித்தார்கள். கந்தன் வேகமாக வந்து வண்டியில் ஏறி, மாடுகளை நடக்கச் செய்தார். அந்த ஐயாதான் சாம்பசிவன் பிள்ளையின் தம்பி உள்ளே இருந்து வந்து எட்டிப் பார்த்தது சாம்பசிவத்தின் மனைவியும் அம்மாவும். அவரு வீட்டோடு வசதியாக இருந்தாரு குடும்பத்தைப் பிரிஞ்சு தனியா துராதொலையிலே போயி வசிக்க நேர்ந்திருக்கு. அதுக்காக வீட்டிலே எல்லோரும் வருத்தப்பட்டுக்கிட்டுத் தான் இருக்காங்க என்று கந்தன் தெரிவித்தார். விவசாய ஆபீஸ் வந்து சேர்ந்தது. ஆபீஸ் பூட்டிக்கிடந்தது. அப்போது காலை மணி பத்து. நீங்க வண்டியிலேயே இருங்க. ஆபிசர் வீடு கொஞ்சம் தள்ளி இருக்குது. நான் போயி சாவி வாங்கிட்டு வாறேன். கால் மணிநேரத்திலே வந்துவிடுவேன் என்று சொல்லி, கந்தன் வேகமாக நடந்தார். எளிய மனிதர்களின் அன்பும் பிறர்க்கு உதவும் குணமும் என்னை சிந்திக்கச் செய்தன. நல்ல மனிதன் என்று எண்ணிக் கொண்டேன். சற்று நேரத்தில் கந்தன் சாவியோடு வந்தார். சிரித்துக் கொண்டே சொன்னார்: ஆபீசருக்கு உங்க பேரிலே வருத்தம் புதுசா வாறவரு நேரே நம்ம வீட்டுக்குத் தானே வரணும்? ஏன் ஆபீசுக்குப் போகணும் என்று குறைபட்டுக் கொண்டார். சரி, சாவியை கொண்டு போ, கொஞ்ச நேரத்திலே நான் வாறேன் என்று சொல்லி அனுப்பினாரு என்று தெரிவித்தார். 20.5 ஐ வல்லிக்கண்ணன்