பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-1.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆபீஸ் கதவை - கம்பி அளிக் கதவு தான் - திறந்து, பெட்டியை இறக்கி உள்ளே கொண்டு போய் வைத்த கந்தன், அப்ப நான் வாறேன்; ஆபீசர் இப்ப வந்திருவாரு என்றார். உரிய வாடகையைப் பெற்றுக் கொண்டு, வண்டியை ஒட்டிச் சென்றார். உடனேயே சாம்பசிவத்தின் தம்பி வந்து நின்றார். வணக்கம் தெரிவித்து, அண்ணாச்சி எப்படி இருக்காக ஏதாவது சமாச்சாரம் சொல்லி அனுப்பினாகளா என்று விசாரித்தார். நான் தகுந்த பதிலை சொன்னேன். சிறிது நேரம் பேசிவிட்டு அவர் போய்ச் சேர்ந்தார். பத்தரை மணி அளவுக்கு அந்தோணிப் பிள்ளை வந்தார். பிரயாணம் பற்றி விசாரித்தார். ஸ்டேஷனிலிருந்து நேரே நம்ம வீட்டுக்கே வந்திருக்கலாமில்லே? ஆபீசுக்கு ஏன் வரணும் என்று கேட்டார். நான் பதில் எதுவும் சொல்லவில்லை. அவர் இயல்பாக இதர விஷயங்கள் பற்றி விசாரித்தார். நீங்க ஆபீசிலேயே தங்கிக் கொள்ளலாம் இடம் நிறைய இருக்கு பெரிய வீடாத்தானே இருக்கு மேஸ்திரி முத்து சாமி பிள்ளையும், வெளியூர் போகாத நாள்களிலே, இங்கே தான் தங்குவாரு என்றும் அவர் சொன்னார். ஒட்டலிலே தானே சாப்பிடணும் என்று கேட்டார் அவர். ஆமா. தாலுகாபீலே வேலை பார்க்கும் உறவினர் ஒருவர் இங்கு இருக்கிறார். ராஜவல்லிபுரத்துக்காரர். தில்லைநாயகம் பிள்ளை என்று பேரு எனக்கு அண்ணாச்சி முறை வேணும் சில வருடங்களாக அவர் இங்கே இருக்கிறார். அவர் மூலம் ஒட்டலுக்கு ஏற்பாடு செய்து கொள்ளலாம் என்றேன். அவர் திருப்தியோடு தலை அசைத்தார். என் வருகையை உரிய முறைப்படி பதிவு செய்தார். ஆபீஸ் முழுவதையும், அங்கிருந்த சாமான்களையும் காட்டினார். பல அறைகள் கொண்ட பெரிய விடு. கடைசி அடுப்பங்கரை அறைக் கதவைத் திறந்தால் சிறு தோட்டம் காலி மனையாகத் தான் இருந்தது. அங்கு ஒரு கிணறும் இருந்தது. வீட்டு மாடியும் விசாலமானதாக இருந்தது. விவசாயச் சாமான்கள், சாக்கு மூட்டைகள் என்று சாமான்களும் அதிகம் காணப்பட்டன. நிலைபெற்ற நினைவுகள் : 207