பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-1.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நான் இன்று பக்கத்து ஊருக்கு கேம்ப் போறேன். நீங்க ரெஸ்ட் எடுங்க. நாளைக்குப் பார்க்கலாம் என்று சொல்லி ஆபீசர் விடை பெற்றுச் சென்றார். பன்னிரண்டு மணி வாக்கில் ஆபீசைப் பூட்டிவிட்டு, நான் தாலுகா ஆபீசுக்குப் போனேன். அங்கு பணிபுரியும் அண்ணாச்சி தில்லைநாயகம் பிள்ளையைக் கண்டு பேசினேன். அவர் எப்ப வந்தே எங்கே இருக்கிறே என்று பிரியமாக விசாரித்தார். இங்கே பக்கத்திலேயே கொம்பங்குளம் சுப்பையாப்பிள்ளை சாப்பாட்டுக் கடை இருக்கு சாப்பாடு எல்லாம் ருசியா, நல்லாயிருக்கும் அங்கேயே நீ சாப்பிட ஏற்பாடு பண்ணிடலாம். இன்னைக்கு நம்ம வீட்டிலே சாப்பிடு என்று உபசரித்தார். உரிய நேரத்தில் அவர் என்னை அழைத்துக் கொண்டு புறப்பட்டார். கொம்பங்குளம் பிள்ளையின் 'சைவாள் சாப்பாட்டுக் கிளப்புக்குக் கூட்டிப்போனார். நான் இந்த ஊருக்கு வந்த புதுசிலே, வீடு பார்த்து குடும்பத்தை அழைத்து வாற வரை, இந்த கிளப்பிலே தான் சாப்பிட்டேன். சுப்பையாப் பிள்ளை நல்ல மனுசன். கடை, சாப்பாட்டு வகைகள் எல்லாம் சுத்தமாக இருக்கும் என்று அண்ணாச்சி விவரித்தபடி வந்தார். சுப்பையாப்பிள்ளை முகம் மலர்ந்து வரவேற்றார். எளிய தோற்றம் கொண்டிருந்த சாதாரண மனிதராகவே தென்பட்டார். கடை முதலாளி என்ற தோரணை எதுவும் அவரிடம் இல்லை. அவரே வாடிக்கையாளர் களுக்கு சாதம் பரிமாறினார். வேறு இரண்டு உதவியாளர்களும் இருந்தார்கள். இலை போடவா? சாப்பிடுறேளா அண்ணாச்சி? என்று அவர் விசாரித்தார். இல்லை இல்லை. இது என் தம்பி, ராஜவல்லிபுரம்தான் ஊரு இங்கே விவசாய ஆபீசிலே வேலை பார்க்க வந்திருக்கான். மாசச் சாப்பாடு ஏற்பாடு பண்ணனும் அதுக்குத்தான் கூட்டி வந்திருக்கேன் என்று அண்ணாச்சி விளக்கினார். அதுக்கென்ன சாப்பிடட்டும் என்றார் பிள்ளை. மறுநாள் முதல், மாதச் சாப்பாடு இவ்வளவு ரூபாய் என்ற கணக்கில், அங்கேயே சாப்பிடுவது என்று பேசிமுடிக்கப்பட்டது. காலையில் இட்டிலி, 208 கிே வல்லிக்கண்ணன்