பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-1.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நான் அந்தப் பக்கமாக மாலை உலா போகிற போது அந்த அலுவலகத்தினுள் சென்று அவனைக் கண்டு பேசுவதை வழக்க மாக்கினேன். நான் போகிற போதெல்லாம் நடராஜன், பதிவு செய்யப்பட்ட பத்திரங்களைப் பார்த்துப் பிரதி எழுதும் வேலையிலேயே மும்முரமாக இருந்தான். பத்திரங்களை காப்பி பண்றதுதான் என் வேலை நான் காப்பியிங் மிஷின் ஆகிவிட்டேன். நான் படித்த படிப்புக்கும் பெற்ற மார்க்கு களுக்கும் எனது புத்திசாலித்தனத்துக்கும் இந்த வேலைக்கும் சம்பந்தமே கிடையாது என்றான். அவனுக்கு புத்தகங்கள் படிப்பதிலோ வேறு எதிலுமோ ஆர்வமே இல்லாமல் போய்விட்டதை உணர்ந்தேன். அவனுக்காக என் மனம் பரிதாப்பட்டது. வேலை இருக்கிறது. சமூக மனிதர்கள் அவனுக்குப் பெண் கொடுக்கத் தயாராக இருப்பார்கள். அவன் கல்யாணம் செய்து கொண்டு, குடும்பஸ்தன் ஆகி. சராசரி பிரஜையாகக் காலம் தள்ளிக் கொண்டிருப்பான். மற்று மொரு மனித இயந்திரமாக நடமாடுவான் என்று எண்ணினேன். என்னோடு படித்த மற்றுமொரு புத்திசாலி மாணவனை சிறிது நாள்களிலேயே கடைவீதியில் சந்திக்க நேரிட்டது. என்னோடு ஐந்தாம் வகுப்பிலிருந்து பத்து (எஸ்.எஸ்.எல்.சி) முடியப் படித்தவன். கணக்குப்படி ஐந்தாவது பாரம் என்பது பத்தாம் வகுப்பு ஆகிறது. ஆறாவது பாரம் பதினொன்றாம் வகுப்பு ஆகும். ஆனாலும் நடை முறையில் அது பத்தாம் வகுப்பு என்றே குறிப்பிடப்பட்டது. குழப்பத்தைத் தவிர்ப்பதற்காக அநேகர் ஐந்தாவது பாரத்தை சின்னப் பத்து என்றும், ஆறாவது பாரத்தை பெரிய பத்து' என்றும் குறிப்பிடுவார்கள். கொம்பங்குளம் சுப்பையாப் பிள்ளை கடையில் சாப்பிட்டுவிட்டு நான் வெளியே வந்தபோது ஒருநாள், எதிர் வரிசையில் இருந்த குமரகுருபரன் அச்சகத்தின் திண்ணைtது சிவசுப்பிரமணியன் நின்றான். பள்ளியில் படித்த காலத்தில் அவனை எல்.எஸ். என்றும் (எல்.எஸ். சிவசுப்பிரமணியன் அவன் முழுப்பெயர்), என்னை ஆர்.எஸ். என்றும் (ஆர்.எஸ். கிருஷ்ணசுவாமியின் சுருக்கமாக) இதர மாணவர்கள் கூப்பிடுவது வழக்கம் கிருஷ்ண சுவாமி, இங்கே எங்கே வந்தே என்று அவன் கேட்டான். அவன் உயரமாகவும் சதைப் பிடிப்போடும் வளர்ந்து காணப்பட்டான். நிலைபெற்ற நினைவுகள் : 211