பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-1.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நான் என்னைப் பற்றிக் கூறிவிட்டு நீ என்ன செய்கிறே என்று விசாரித்தேன். ஒண்ணும் செய்யலே. குமரகுருபரன் அச்சக முதலாளிதான் என் மாமனார். அவர் மகளை நான் கல்யாணம் செய்திருக்கிறேன் என்றான். பாளையங்கோட்டையில் தான் இருக்கிறேன். இங்கே மாமனார் வீட்டுக்கு அடிக்கடி வருவது உண்டு என்றும் தெரிவித்தான். படிக்கிற காலத்தில் ஆர்வமும் அறிவுக் கூர்மையும் கொண்டவனாக இருந்த அவன் இப்போது ரொம்ப சாதாரணமானவனாக சராசரி நபராக வாழ்ந்து கொண்டிருந்தான் என்று தெரிந்தது. அவனுக்காகவும் என் மனம் பரிதாபப்பட்டது. படித்த படிப்புக்கும் வாழ்க்கை நடத்துவதற்கும் எவ்விதமான தொடர்பும் இல்லை. ஏதோ படிக்கிறார்கள் ஏதாவது வேலை தேடி அலைகிறார்கள். வேலை கிடைத்தால் திருப்தி அடைந்து கல்யாணம் மனைவி, குடும்பம், பிள்ளைகள் என்று வாழ்க்கையில் செட்டில் ஆகி விடுகிறார்கள். பெரும்பாலானவர்களின் வாழ்க்கை முறை இது வாகத்தான் இருக்கிறது என்று எண்ணினேன். அப்புறம் அவர்கள் அறிவை வளர்க்க வேண்டும், சிந்தனைத் திறனை வளர்க்க வேண்டும் என்று அக்கறை கொள்வதேயில்லை. புத்தகங்கள் படிப்பதில் கூட நாட்டம் கொள்வதில்லை. இந்த வாழ்க்கைமுறை சரியானதில்லை என்று எனக்குப் பட்டது. இக் கருத்தை எதிரொலிப்பது போல, ஆபீசுக்கு வந்த ஒரு அதிகாரி பேசினார். செடிகொடிகளுக்கு பூச்சிகளால் நோய் ஏற்படும்போது, அதைப் போக்குவதற்காக உரிய மருந்து தெளித்து சிகிச்சை செய்யும் அதிகாரி அவர். பூரீவைகுண்டத்தில் உயர்நிலைப் பள்ளியை ஒட்டிய தோட்டத்தில் முந்திரி (திராட்சை)க்கொடி பயிரிடப்பட்டிருந்தது. காய்க்கும் பருவம் ஏதோ பூச்சி படர்ந்து நோய் கண்டிருந்தது. கொடிகளுக்கு பூச்சி மருந்து தெளிக்க வேண்டும் என்று, அவற்றைப் பார்வையிட்ட டிமான்ஸ்ட் ரேட்டர் தெரிவித்தார். அதை கவனிப்பதற்காக "என்ட்டமாலஜிஸ்ட்' பூச்சிகள் பற்றி விஞ்ஞானம் கற்றுத் தேர்ந்த சயன்டிஸ்ட்) வரவேண்டும் என்று மேல் ஆபீசுக்கு எழுதினார். ஒருநாள் அந்த அதிகாரி வந்து சேர்ந்தார். இளைஞர் கல்லூரி மாணவர் போல் தோற்றம் கொண்டிருந்தார். சுப்பையர் என்று பெயர். 212 3கி வல்லிக்கண்ணன்