பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-1.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்னை அவருக்குப் பிடித்து விட்டது. பகலில் கொடிகளுக்கு மருந்து தெளிக்கும் பணியை கவனித்தார். அதற்கான மேஸ்திரி மருந்துகள், உரிய தெளிப்பான் கருவி எல்லாம் கொண்டு வந்திருந்தான். மாலை ஐந்து மணி ஆனதும், மருந்து தெளிக்கப்பட்ட திராட்சைக் கொடிகளை பார்த்து வரலாம்: நீங்களும் வாங்களேன் என்று அழைத்தார். போனேன். அவர் பல விஷயங்கள் பற்றியும் பேசிக்கொண்டு வந்தார். நாம படிக்கிற படிப்புக்கும் கிடைக்கிற வேலைக்கும் சம்பந்தமே கிடையாது. மேலும், இந்த நோக்கத்துக்காகத் தான் கல்வி கற்கணும் என்று யாரும் கல்வி பயில்வதுமில்லை. பெற்றோர்கள் ஏதோ ஆசைப்படுகிறார்கள்; படிக்க வைக்கிறார்கள். நான் காலேஜிலே படித்த போது, என்டமால ஜிஸ்ட் ஆகனும் என்று எண்ணியா படித்தேன்? நான் படித்த படிப்புக்கு வேறே ஏதாவது வேலை கிடைத்திருந்தாலும் சேர்ந்திருப்பேன். ஏதோ காலேஜ் படிப்பு படித்தேன். படித்து முடித்ததும் வேலை தேட வேண்டியிருந்தது. என்டமாலஜிஸ்ட் வேலை கிடைத்தது. அதுக்காக சில காலம் பயிற்சி பெற வேண்டியதாயிற்று என்று சொல்லிக்கொண்டு வநதாா. வாழ்க்கை இப்படித்தான் அமைந்து போகிறது. வந்து சேர்வதைக் கொண்டு வாழ்ந்து முன்னேறுவதில் கருத்தாகிவிடுகிறார்கள் பலரும் என்று நான் எண்ணிக்கொண்டேன். பூரீவைகுண்டம் விவசாய ஆபீசில் சுந்தரம் என்ற வாலிபர் மெசஞ்சராக வேலை பார்த்துக் கொண்டிருந்தார். முதல் சந்திப்பின் போது எங்கள் இருவருக்கும் ஆச்சர்ய உணர்வு தான் ஏற்பட்டது. சுந்தரம் பாளையங்கோட்டை சேவியர்ஸ் ஹைஸ்கூலில் என் அண்ணன் கோமதிநாயகத்துடன் படித்தவர். ஐந்தாவது பாரம் வரை படித்தார். என்னை அவருக்கு நன்றாகத் தெரியும் ஐந்தாவது பாரம் படித்துக் கொண்டிருந்தபோது, சுந்தரத்தின் அப்பா திடீரென இறந்து விட்டார். வறுமையான குடும்பச் சூழல் சுந்தரத்தால் மேற் கொண்டு படிக்க முடிய வில்லை. அவருக்கு வேண்டியவர் ஒருவர் விவசாய இலாகாவில் செல்வாக்கு உடையவராக இருந்தார். அவர் முயற்சி செய்து சுந்தரத்துக்கு இந்த வேலை கிடைக்கும்படி செய்தார். இதை சுந்தரம் தெரிவித்தார். நிலைபெற்ற நினைவுகள் : 213