பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-1.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சமீபத்திலே தான் சீனா பற்றி ஒன்று எழுதிமுடித்தேன். ஒரு புத்தகமாக வரக்கூடிய அளவுக்கு எழுதியிருக்கிறேன். அதை படித்துப் பாருங்க என்று கூறி எழுத்துப்பிரதியை என்னிடம் தந்தார். இங்கே டிமான்ஸ்ட்ரேட்டரா இருக்கிறவரு நல்ல ஆளு இல்லே. நாம பேசிப் பழகுகிறோம்னு தெரிஞ்சாலே சந்தேகப் படுவாரு ஏதாவது தொல்லை கொடுப்பாரு ஆபீஸ் நேரத்திலே நாம பேசிக்கொள்ள வேண்டாம் ராத்திரி இங்கே வசதியாப் பேசிமகிழலாம் என்றும் வக்கில் முதலியார் தெரிவித்தார். அப்படியே செய்யலாம் என்று நானும் இசைவு தெரிவித்தேன். கோட்டை ராமு பிள்ளையை உங்களுக்கு எப்படித் தெரியும்? என்று கேட்டார் அவர். அவரை எனக்குத் தெரியாது; அவராகத் தான் என்னை தேடி வந்தார் என்று நான் விவரம் கூறினேன். இங்கு பூரீவைகுண்டம் கோட்டை பற்றியும் கோட்டைப் பிள்ளைமார் பற்றியும் குறிப்பிட வேண்டியது அவசியமாகிறது. பூரீவைகுண்டம் ஊரின் ஒரு புறத்தில், ஆற்றுக்குப் போகிற வழியில், பெரும் பரப்பளவை அடைத்தபடி எழுந்து நின்றது ஒரு கோட்டை புராதன முறையில், மண்ணால் பெரிதாகக் கட்டப்பட்டிருந்தது அது. அதன் சுவர்கள் அடிப்புறம் அகலமாக அமைந்து உயரம் போகப் போகச் சிறுத்துக் காணப்படும். கோட்டைச் சுவர்கள் புராதனகால தொழில் நுட்பங்களைக் கையாண்டு மிக வலு உள்ளதாகவே கட்டப் பட்டிருந்தது. அதனுள் ஒரு இனத்துப் பிள்ளைமார் தனித்து ஒதுங்கி வாழ்ந் தார்கள். அவர்கள் கோட்டைப் பிள்ளைமார் என்று குறிப்பிடப் பட்டார்கள். அவர்களில் ஆண்கள் சகலவிதமான சுதந்திரமும் பெற்றிருந்தார்கள். பெண்கள் அடக்கி ஒடுக்கப்பட்டு அடிமை வாழ்வு வாழ்ந்தார்கள் என்று தான் சொல்ல வேண்டும். சில நூறு வருடங்களுக்கு முன்பு, வடக்கேயிருந்து புலம் பெயர்ந்து வந்த இனத்தினர் அவர்கள் என்று சொல்லப்பட்டது. முஸ்லிம்கள் தமிழ் நாட்டில் படையெடுத்து வந்த போது பலரும் பலவிதமாக பாதிக்கப் பட்டார்கள். முக்கியமாக பெண்கள் சிறைப் பிடிக்கப்பட்டார்கள். எந்த இனத்துப் பெண்ணாக இருந்தாலும் அவர்களைப் பிடித்துச் சென்று 220 : வல்லிக்கண்ணன்