பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-1.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அதற்குள் கோட்டைக்குள் வசித்த குடும்பத் தலைவர்கள் சிலருக்குள்ளேயே பங்காளிக் காய்ச்சலும் பகைமை உணர்வும் ஏற்படலாயிற்று செல்வாக்குப் பெற்று வளர்ந்து வந்த ஒரு தலைவர் பட்டப்பகலிலேயே கொலை செய்யப்பட்டார். 1950களின் பிற்பகுதியில் அதனால் அவர்களில் ஒரு பகுதியினர் குடும்பத்தோடுகோட்டையை விட்டு வெளியேறினார்கள். பாளையங்கோட்டை, தூத்துக்குடி என்று பல ஊர்களில் குடியேறி, அங்கங்கே ஏதாவது வேலை தேடிக்கொண்டு தங்கிவிட்டார்கள். பிறகுபிறகு மற்றக் குடும்பத்தினரும் வெளியேறி எங்கெங்கோ போய்ச் சேர்ந்தார்கள். 1970களில் கோட்டைக்குள் யாரும் வசிக்கவில்லை என்ற நிலைமை ஏற்பட்டது. கோட்டைச் சுவர்களும் சரியான பராமரிப்பு இல்லாததால் சீர்குலைந்தன. மழையில் கரைந்தும், வெயிலில் காய்ந்து மண் உதிர்ந்தும் காணப்பட்டது. பிறகு என்ன ஆயிற்றோ தெரியாது. கோட்டைப் பிள்ளைமார் செயலாக இருந்த காலத்தில், 1940களின் ஆரம்பத்தில், கோட்டையை சேர்ந்த பெரியபிள்ளை ஒருவர் வில் வண்டியில், சினிமா நடிகை எஸ். டி. சுப்புலட்சுமியின் வீட்டுக்கு தினம் வந்து போய்க் கொண்டிருந்தார். நடிகையின் அம்மாவுக்கும் அவருக்கும் நெருக்கமான உறவு என்று பேச்சு ஊரில் நடமாடியது. அவர் காலை ஒன்பது பத்து மணிக்கு வந்தால், மாலையில் அல்லது முன்னிரவில் தான் திரும்பிப் போவார். சினிமா உலகில் புகழுடன் பிரகாசித்த நடிகை எஸ்.டி. சுப்பு லட்சுமியின் ஊர் பூரீவைகுண்டம் தான். விவசாய ஆபீஸ் இருந்த தெருவில், எதிர் வரிசையில் கொஞ்சம் தள்ளியிருந்தது நடிகையின் வீடு பழைய வீட்டை இடித்துவிட்டு, பெரிதாக நவீன பாணியில் ஒரு வீடு ಹL-LL೭® ಸಿಹತ ` கோட்டைப் பிள்ளையின் മേു7്ഞഖഥി தான் அது வளர்ந்தது. அவரது கண்காணிப்போடு தான் புதுமனை புகுவிழா, நான் பூரீவைகுண்டத்தில் இருந்த வருடம், வெகுசிறப்பாக ஆடம்பரமாக நடைபெற்றது. சுப்புலட்சுமி ஒரு சிறு கார் வைத்திருந்தார். கோட்டைக்குள் வசித்த பெண்கள் கார் பார்த்ததில்லை என்பதற்காக, அவர் அந்தக் காரை கோட்டையினுள்ளேயே கொண்டு சென்று காட்சிப்படுத்தினார். அது முக்கிய செய்தியாக பேசப்பட்டது அப்போது, நிலைபெற்ற நினைவுகள் 223