பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-1.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருள் இல்லாத ஏழை எளியவர்களுக்கு தாராளமாக வழங்கினான். அதனால் அவனை சாதாரண மக்கள் போற்றிப் புகழ்ந்தார்கள். காசித்தேவனின் வீரச் செயல்களை பாராட்டி மகிழ்ந்தார்கள். காசி பத்தாம் வகுப்பு வரை படித்தவன். படிக்கிற காலத்திலேயே அவனுக்கு வீரச் செயல்கள் புரிந்த சாகசக்காரர்களின் வரலாறுகள் வெகுவாகப் பிடித்திருந்தன. முக்கியமாக இங்கிலாந்து தேசத்தில் ஒரு வீரநாயகனாக ஒருகாலத்தில் விளங்கிய ராபின் ஹூட் கதை அவனை மிக வசீகரித்தது. ராபின் ஹஅட் கொள்ளைக்காரன் என்று பெயர் பெற்றிருந்தான். அதே சமயம் அவன் ஏழை பங்காளனாக, எளியோருக்கு உதவுகிறவ னாகவும் விளங்கினான். செல்வம் மிகுதியாகப் பெற்றிருந்த மேட்டுக்குடி யினரிடம் கொள்ளையடித்தான். நாட்டில் வறுமையால் கஷ்டப்பட்ட ஏழைமக்களுக்கு மனமுவந்து கொடுத்தான். அதே போல் தானும் வாழ வேண்டும் என்று ஆசைப்பட்டான் காசி. தமிழ் நாட்டில் ஒரு காலத்தில் பெரும் கொள்ளைக் காரனாகத் திரிந்த ஜம்புலிங்கத்தின் கதை நாட்டுமக்களால் பெரிதும் பேசப்பட்டு வந்தது. அவனும் இருக்கிறவர்களிடம் பணம் நகைகள் முதலியவற்றை கொள்ளையிட்டான். இல்லாதவர்களுக்கு அதிகம் உதவினான். அதனால் சாதாரண ஜனங்கள் அவனை நேசித்தார்கள். ஆதரித்தார்கள். போலீசார் கைகளில் பிடிபடாமல் அவன் மறைந்து வாழமுடிந்தது நீண்டகாலம் ஜம்புலிங்க நாடாரும் காசித் தேவனின் லட்சிய முன்னோடியாக அமைந்திருந்தார். காசி ஒழுங்காக, நல்ல முறையில், வாழ முடியாது என்று அறிந்தான். ஆகவே திருட்டுத் தொழிலில் ஈடுபட்டான். ஆசாரி ஒருவன் வலிமையானதுப்பாக்கி ஒன்று செய்து கொடுத்தார் அவனுக்கு அந்த நாட்டுத்துப்பாக்கி எப்போதும் அவன் கையிலிருந்தது. காசி பற்றிய உண்மைகளும் கற்பனைகளும் விரைவில் எங்கும் பரவின. அவனைப் பற்றி பயமும்பிதியும் நெடுக ஏற்பட்டன. அவனோடு அவன் நம்பிக்கைக்குப் பாத்திரமான சகா ஒருவனும் சேர்ந்தான். இருவரும் அங்கே கொள்ளையடித்தனர், இந்த ஊரில் இன்னார் வீட்டில் திருடினார்கள் என்ற தன்மையில் பேச்சுகள் தினந்தோறும் அடிபட்டன. நிலைபெற்ற நினைவுகள் கீ 225