பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-1.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தங்குவதற்கும், நினைத்தபோது வந்து போவதற்கும் சவுகரியமாகத் தான் இருந்தது அந்த இடம் மூன்று மாதங்கள் போயிருக்கும் கொம்பங்குளம் பிள்ளை ஒட்டல் அருகே ஒருநாள் சேரகுளம் ஊர்காரர் ஒருவர் என்னைப் பார்த்தார். என் அம்மாவுக்கு உறவுக்காரர். எனக்கு மாமா உறவினர். அவர் பிரியமாக என்னைப் பற்றி விசாரித்தார். எங்கே தங்கி யிருக்கிறே என்று கேட்டார். சொன்னேன். ஏன் வாடகை கொடுத்து ஒரு இடத்திலே தங்கணும்? இதோ இந்தா பக்கத்திலே இருக்கிற ரூம் என்னுதுதான். சும்மா அடைத்தே தான் கிடக்கு நீ அதிலே தங்கிக்கொள். வாடகை எதுவும் தரவேண்டாம். ரூமை திறந்து வச்சு ராத்திரி விளக்கேத்தி வைக்காம எப்பவும் அடைச்சே கிடப்பது நல்லாயில்லை. நீ புழங்கிக்கொள் என்று அன்புடன் கூறினார் அவர். அந்தச் சிறு கட்டிடத்தின் சாவியையும் தந்தார். கொம்பங்குளத்துப் பிள்ளை ஒட்டல் இருந்த வரிசையிலேயே நான்கு வீடுகள் தள்ளி இருந்தது அந்தச் சிறு கட்டிடம் ஒரே அறை தான். நான் மறுநாளே அந்த இடத்துக்குக் குடிபெயர்ந்தேன். ஒரு பெட்டியும் படுக்கையும் தான் எனது சாமான்கள். அவற்றை எளிதில் எங்கும் எடுத்துப் போய் விடலாம். மூன்று மாதங்கள் சென்றன. ஒருநாள் அந்த மாமா, அன்பு வறண்ட குரலில் பேசினார். எனக்கு இந்த இடம் தேவைப்படுது. நீதங்குறதுக்கு வேறே இடம் பார்த்துக் கொள்வது நல்லது என்றார். அவராகத் தான் முன் வந்து உதவினார். இப்போது அவராகவே அவருடைய உதவியை வாபஸ் பெறுகிறார். ஏதாவது காரணம் இருக்கும் நான் அதை அறிந்து கொள்ள விரும்பவில்லை. மனித மனம் ஒரே நிலையில் இருக்காது மாறிக் கொண்டே இருப்பது அதன் இயல்பு என்று எண்ணினேன். மீண்டும் மேஸ்திரி முத்து சாமி பிள்ளை உதவினார். ஒரு சின்னத் தெருவில் இருந்த பெரிய வீடு ஒன்றின் முன் பக்கத்து அறை தெரு ஒரத்து அறை - வாடகைக்குக் கிடைக்கும். போக வரத் தனி வழி, தெருப்பக்கமே இருக்கு வீட்டுக்காரங்க, அவங்க பக்கத்துக் கதவைச் சாத்தி பூட்டிக்கொள்வாங்க ரூமிலே தங்குறவங்க இந்தப் பக்கம் உள்தாழ்ப்பாள் போட்டுக் கொள்ளலாம். வீட்டுக்காரங்களுக்கும் நிலைபெற்ற நினைவுகள் 8 227