பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-1.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறையிலே தங்குறவங்களுக்கும் எந்த விதமான தொடர்பும் இராது என்று அவர் விவரித்தார். அந்த இடத்தை கொண்டு போய் காட்டினார். இசைவு தெரி வித்தேன். மாதம் மூன்று ரூபாய் வாடகை என்று பேசி முடித்து, அறைக்கான திறவுகோல் என்னிடம் தரப்பட்டது. அங்கு வசிக்கலானேன். வசதியானது என்று சொல்லலாம். ஆனால் தெருப்பக்கத்துக் கதவை சாத்திவிட்டால், காற்றேவராது. பகலில் அறையில் இருக்கும் போது கதவை நன்கு திறந்து வைக்கலாம். இரவில் தூங்கும் பொழுது, அடைத்து வைக்கத் தானே வேண்டும்? சிரமமாகத் தான் இருந்தது. - இரண்டு மாதங்களில் அந்த நிலைமையிலிருந்து ஒரு விடுதலை கிடைத்தது. என் அம்மா பூரீவைகுண்டம் வந்து, வீடு அமர்த்தித் தங்க விரும்பினாள். நீ ஏன் தனியாக இருந்து, ஒட்டலில் சாப்பிட்டு கஷ்டப்படனும்? ஒரு வீடு பார்த்தால், நானும் தம்பியும் அங்கே வந்துவிடுவோம். வீட்டுச் சமையல் சாப்பாடு சவுகரியமாக இருக்கும் என்றாள். அதன்படியே வீடு பார்த்தேன். நான் தங்கிய அறையின் வீட்டுச் சொந்தக்காரருக்கு அந்தப் பெரிய வீட்டை ஒட்டி மேல்புறம் ஒரு சின்னக் குச்சுவீடு இருந்தது. அதில் வசித்தவர்கள் காலி செய்துவிட்டுப் போனதால், அது காலியாகக் கிடந்தது. ஐந்து ரூபாய் தான் வாடகை அந்த வீட்டைப் பேசி முடித்து, சாவி வாங்கிக் கொண்டேன். ஒரு நல்ல நாள் பார்த்து ஊரிலிருந்து தம்பி ஒரு வண்டியில் சாமான்களைக் கொண்டு வந்து சேர்த்தான். பிறகு ஒருநாள் அம்மா வந்தாள். எனது ஒட்டல் சாப்பாட்டுக்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட்டது. வீட்டு வாழ்க்கை இனிமையாகத் தான் இருந்தது. . சில மாதங்களில் ஏதோ ஒரு காரணத்தால் அந்த வீட்டைக் காலி பண்ணிவிட்டு, வேறு வீட்டுக்குப் போக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. பக்கத்துத் தெருவிலேயே ஒரு வீடு வாடகைக்குக் கிடைத்தது. வீதியை விட்டு சிறிது உள்ளடங்கியிருந்தது அது. நீண்ட ஒரு அறை, முன் 228 : வல்லிக்கண்ணன்