பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-1.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அனுப்புவது ராஜவல்லிபுரம் வீட்டுக்கே கொண்டு போகலாமா என்ற பிரச்சினை எழுந்தது. ராஜவல்லிபுரம் போய் தங்குவதை அம்மா விரும்பவில்லை. அதனால், திருநெல்வேலியில் தி மெடிகல் ஸ்டோர்ஸ் என்ற மருந்துக் கடையில் வேலை பார்த்துக் கொண்டிருந்த அண்ணன் கோமதி நாயகத்துக்கு எழுதினோம். திருநெல்வேலி டவுணில், ஒரு சிறு அறையில் தங்கிக் கொண்டு அண்ணன், ஒரு ஆச்சி நடத்திய சாப்பாட்டு விடுதியில் சாப்பிட்டுக் கொண்டு காலம் கழித்தார். குறிப்பிட்ட சிலபேருக்கு மட்டும் சாப்பாடு தயாரித்து வழங்கிக் கொண்டிருந்தாள் அந்த ஆச்சி. காலையில் பலகாரம் - இட்டிலி அல்லது தோசை, மத்தியானமும் இரவும் சாப்பாடு கிடைக்கும். வசதியாகத் தான் இருந்தது. திருநெல்வேலியிலேயே ஒரு வீடு வாடகைக்கு அமர்த்தி, அங்கேயே எல்லோரும் ஒன்றாக இருக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டது. அண்ணன் அரசடிப்பாலத் தெருவில் வசதியான ஒரு வீட்டைப் பார்த்து உரிய ஏற்பாடுகளை செய்தார். எனக்கு விடுதலை அளிக்கும் உத்திரவு மேல் ஆபீசிலிருந்து வந்து சேர்ந்தது. நான் சுதந்திரன் ஆனேன். வீட்டுச் சாமான்கள் எல்லாம் உரியமுறையில் கட்டி மூட்டை களாக்கப்பட்டன. ஒரு வண்டியில் அடங்கிவிடும். வண்டியும் பேசியாயிற்று. சாமான்களை வண்டியில் ஏற்றிக் கொண்டு, தம்பியும் உடன்வர, திருநெல்வேலியில் சேர்க்க வேண்டும். அம்மாவும் நானும் ரயிலில் போவது என்றும் தீர்மானமாயிற்று. அதற்கு முன்னர் திருச்செந்துருக்குப் போய், முருகனை சேவிக்க வேண்டும் இனியாவது நமக்கு நல்ல காலம் வரணும் என்று கும்பிட்டு விட்டு திருநெல்வேலிக்குப் போகலாம் என்று அம்மா கருதினாள். எனது போக்குகள் அம்மாவுக்குப் பிடிக்கவில்லை. இருந்த வேலையை வேண்டாம் என்று உதறியது அவளுக்கு அறவே பிடிக்கவில்லை. அம்மா விருப்பப்படியே நாங்கள் - அம்மா, நான், தம்பி முருகேசன் மறுநாள் திருச்செந்தூர் போனோம். நிலைபெற்ற நினைவுகள் : 233