பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-1.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விளிம்பு தென்பட்டது. ஒளிவட்டம் தகத்தகாயமாக மேலேறியது. வர்ணனைக்கு உட்படாத அற்புத மலர் மொட்டு ஒன்று நீருக் குள்ளிருந்து மேலேறி வந்ததாகத் தோன்றியது. விரைவிலேயே வானமும் கடலும் பேரொளிப் பரப்பாயின. சூரியன் வேகமாக மேலேறியது. புதிய உதயம் புத்தொளி பெற்ற மற்றுமொரு நாள் என் உள்ளத்தில் அது உவகைப் பெருக்கை நிரப்பியது. மறக்க முடியாத உதயம் அது. 锚 售3路一 என் வாழ்க்கையிலும் புதிய உதயம் என்றுதான் சொல்ல வேண்டும். மூன்று வருடங்களும் ஏழு மாதங்களும் விவசாய ஆபீஸ் குமாஸ்தா வேலையில் கழிந்திருந்தன. பரமக்குடியில் இரண்டு வருடங்களும் மீதிக் காலம் பூரீவைகுண்டத்திலுமாகப் போயிருந்தன. அந்த வேலையை நான் முயன்று தேடிப் பெறவில்லை. உறவினர் ஒருவரின் உதவியால் அது என்னை தேடி வந்தது. நான் அதை விட்டு விட்டேன் என்று அறிந்ததும் அந்தப் பெரியவர் வருத்தப்பட்டார். கோபமும் கொண்டார். அவரிடம் யோசனை கேட்காமல் நானாக வேலையைப் போக்கிக் கொண்டது நான் அவருக்கு இழைத்த அவ மதிப்பு என்றும் கருதினார். அதற்கு நான் என்ன செய்யமுடியும்? காலம் காட்டிய வழி என்றே என் மனம் கூறியது. இருக்கிற வேலையை விட்டுப்போட்டு இனிமேல் என்ன பண்ணப் போகிறானாம் என்று என் பெரிய அண்ணாச்சி கல்யாண சுந்தரம் விமர்சித்தார். இனி என்ன செய்வது எப்படி முன்னேறுவது என்ற எண்ணம் எதுவும் எனக்கு எழுந்ததில்லை. நான் எப்படியும் ஒரு நல்ல எழுத்தாள னாக வளர்ந்தே தீர்வேன் என்ற உறுதி என்னுள் படிந்திருந்தது. நிறைய எழுத வேண்டும், நிறைய நிறையப் படிக்க வேண்டும் என்றொரு உறுத்தல் என்னுள் ஓயாது அழுத்திக் கொண்டிருந்தது. நிலைபெற்ற நினைவுகள் : 235