பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-1.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தாய்வழிப் பாட்டனார் அல்லது தாய் மாமனார் இத் தாலியை பெண்ணின் கழுத்தில் கட்டுவார். நவனாலி என்று சொல்லப்படுகிற நவதாலி ஒன்பது தங்க உருண்டைகளும் பத்து பவளமணிகளும் (மொத்தம் பத்தொன்பது) சேர்த்துக் கோர்க்கப்பட்ட சரடு ஆகும் சிறுமியாக இருக்கிற போது கட்டப்படுகிற இத்தாலி, முறைப்படி திருமணம் நடைபெறுகிறவரை கழற்றப்படாமலே பெண்ணின் கழுத்தை அணிசெய்யும். பிறகு, திருமணம் நிகழ்ந்து கணவன் கட்டுகிற திருமாங்கல்யம் கழுத்து அணியாகச் சேர்ந்த பின்னர்தான் நவனாலி கழட்டப்படும் அப்போது நவதாலியில் கோர்க்கப்பட்டிருந்த மணிகளில் பவள உருண்டை மூன்றும் தங்க உருண்டை இரண்டும் தனியாக எடுத்துத் திருமாங்கல்யத்தில் சேர்த்துக் கோர்த்து விடுவர். பின்னர் இவற்றை சிறியவடிவில் செய்து தாலியில் நிரந்தரமாக இணைத்துக் கொள்வர். விளக்கிடு கல்யாணத்துக்கும் தனியான சடங்குசம்பிரதாயங்கள் எல்லாம் உண்டு வசதிபடைத்த குடும்பத்தினர் பெரும் அளவில் ஆடம்பரமாக இவ்விசேஷத்தைச் செய்வர். இது தை மாதம் முதல் நாளன்று பொங்கல் தினத்தில் நடத்தப்படுகிற விசேஷம் ஆகும். பெண்களுக்கு சிறு வயதில் விளக்கிடு கல்யாணம் நடத்தி, தாலி கட்டி, கழற்றாமலே அணிந்திருக்க வேண்டும் என்பதை ஒரு சாதிச் சடங்கு ஆக ஆக்கியதற்கும் வரலாற்றுச் சார்புடைய கதை ஒன்று வழங்கப்பட்டது உண்டு முன்னொரு காலத்தில் முஸ்லிம் மன்னர்கள் படையெடுத்து வந்து ஆட்சியைப் பிடித்திருந்த போது, அவர்கள் நாட்டில் உள்ள பெண்களைக் கவர்ந்து சென்று தங்கள் அந்தப்புரத்தில் சேர்த்து விடுவது நடைபெற்றது. ஆயினும், அவர்கள் தாலிகட்டிய பெண்களை கல்யாணமாகிக் கணவனோடு வாழ்ந்த மகளிரை) தொடத் துணியவில்லை. ஆகவே, அவர்களுக்குப் பயந்து வசிக்க நேர்ந்த மக்கள் தங்கள் வீட்டுப் பெண்களுக்கு சிறுவயதிலேயே கல்யாணம் என்று பெயர் பண்ணி ஒரு தாலியைக் கழுத்தில் கட்டிவைக்கிற வழக்கத்தை கைக் கொண்டார்கள், காலப் போக்கில், அவசியம் இல்லாத போதிலும், நவதாலி கட்டி எப்போதும் அதை ஒரு அணிகலனாய் கழுத்தில் கட்டியிருக்க வேண்டும் என்பது சாஸ்திர சம்பிரதாயம் ஆகிவிட்டது. கல்வியும் நாகரிகமும் காலமாறுபாடுகளும் ஏற்பட ஏற்பட, கார்காத்தாரிடையே விளக்கிடு கல்யாணம் நடத்தி நவதாலிகட்டுகிற 26 3 வல்லிக்கண்ணன்