பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-1.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பயிர்பண்ணுவதில்லை பள்ளர்கள் எனப்படுகிற விவசாயத் தொழிலாளர் களை வேலைக்கு வைத்துக் கொண்டு வேளாண்மை செய்கிறார்கள். உழைப்பவர்களுக்கு ஒரளவு கூலிகொடுக்கப்படும் நெல்லாக சிறிதளவு நிலம் வைத்திருப்பவர் கூட தன்னை லேண்ட் லார்ட் (நிலப்பிரபு என்று சொல்லிக் கொள்வதில் பெருமைப் படுகிறார்கள், எப்போதாவது பத்திரப் பதிவில் அல்லது கோரிக்கை மனுவில் தொழில் என்று குறிக்க வேண்டிய இடத்தில் சுக.ஜீவனம் என்று அவர்கள் குறிப்பிடும் வழக்கம் இருந்தது. தாங்கள் உழைக்காமலே பிறர் உழைப்பில் வாழ்கிற முறையை சுகpவனம் என்று குறிப்பிடுவதும் அதை ஒரு தொழிலாகக் கருதுவதும் சமூக வாழ்வின் விபரீத முரண்களில் ஒன்றுதான் என்றே எனக்குத் தோன்றும். ராஜவல்லிபுரத்தில் இவ்விதம் சுக.ஜீவனம் செய்து வாழ்ந்த வசதிபடைத்த பெரிய வீட்டுக்காரர்களில் முத்தைய பிள்ளையும் ஒருவர். அவருக்கு ஏழு ஆண்களும் மூன்று பெண்களும் பிள்ளைச் செல்வங்கள்: அவர்களில் மூன்றாவது மகன்தான் சுப்பிரமணிய பிள்ளை - என் தந்தை மகன்களில் பலரும் ஒரளவு கல்வி பயின்றிருந்தார்கள். என் அப்பா தான் சர்க்கார் உத்தியோகத்தில் சேரும் அளவுக்குக் கல்விப் பயிற்சி பெற்றிருந்தார். அரசின் ஆப்காரி டிப்பார்ட்மென்ட்டில், சால்ட் அன்ட் எக்சைஸ் சப் இன்ஸ்பெக்டர் ஆகச் சேர்ந்து பணியாற்றினார். அதனால் வெளியூர்களிலேயே வசிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. முத்தைய பிள்ளை தன் மகன்களுக்கு அரைக்கோட்டை விரைப்பாடும் ஒரு வீடு கட்டுவதற்கு உரிய மனையும் பிரித்துக் கொடுக்கக் கூடிய வசதி பெற்றிருந்தார். அப்படியே பங்கிட்டுக் கொடுத்தார். ஆகவே, என் பெரியப்பாகள் இருவரும் ஏனைய சிற்றப்பாக் களும் ஊரோடு தங்கி விவசாயம் செய்து கொண்டிருந்தார்கள். இரண்டு போகம் நெல் பயிரிடுவதுடன், கோடைகாலத்தில் வயல்களில் நிலவாகை பயிரிடும் வழக்கம் அந்தக் காலத்தில் திருநெல்வேலி ஜில்லாவில் பெரும் அளவில் நிலவியது. (ஜில்லா என்பதே அந்நாள்களில் வழக்கில் இருந்தது. வெகுகாலத்துக்குப் பின்னரே 'மாவட்டம் என்ற சொல் நடைமுறைக்கு வந்தது) நிலவாகை என்பது அந்நாள்களில் சாயம் காய்ச்சுவதற்கும், சாயப் பவுடர் தயாரிப்பதற்கும் வெகுவாகப் பயன்பட்டது. சாயம் தயாரிப்ப 28 : வல்லிக்கண்ணன்