பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-1.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தற்கு அவுரி என்ற பயிரும் உபயோகப்பட்டது. அது வடநாட்டில் தான் அதிகம் பயிரிடப்பெற்றது. நிலவாகைப் பயிர் கறிவேப்பிலை போன்ற வடிவில் அமைந்த இலைகளையும், கொத்து கொத்தாகப் பூக்கும் அழகிய மஞ்சள் நிறப் பூக்களையும் கொண்டது. அதன் இலைகளை தக்க பருவத்தில் சேகரித்து, நிழலில் உலர்த்தி பதப்படுத்தி, பெரிய சாக்குகளில் அடைத்து மூட்டை களாக்கி ஏற்றுமதி செய்தார்கள். இரண்டுகோணிப்பைகளை ஒன்றாகச் சேர்த்துத்தைத்த பெரிய சாக்குப் பை தான் உலர்ந்த இலைகளைத் திணித்து மூட்டையாகத்தைப்பதற்கு உபயோகப்படுத்தப்பட்டது. நிலவாகை உற்பத்தியும், நிலவாகை வியாபாரமும் திருநெல்வேலி யிலும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களிலும் முற்காலத்தில் மும்முரமாக நடைபெற்றன. நிலவாகை இலைகள் ஆங்கிலத்தில் லென்னா லீவ்ஸ்’ என்று குறிக்கப்பட்டன. இப்பயிர் திருநெல்வேலி வட்டாரத்திலேயே மிகுதியாகப் பயிரிடப்பெற்று, வியாபாரப் பொருளாக இருந்ததனால், அது டின்னவெல்லி லென்னா என்றே வெள்ளைக்காரர்களால் சிறப்புப் பெயர்பெற்று விளங்கியது. கிராமங்களில் பயிராகி, உலரப்போட்டு, மூடைகளாக்கப்பட்ட நிலவாகை இலைகளை விவசாயிகளிடமிருந்து விலைக்கு வாங்கி, உரிய முறையில் கப்பலுக்கு அனுப்பி ஏற்றுமதி செய்வதற்கென்றே, தாளையூத்து ரயில்நிலையத்துக்கு அருகில் லென்னக் அண்ட்கோ என்ற வெள்ளைக்காரக் கம்பெனி செயல்பட்டது. அதன் கட்டிடம் அந்தக் காலத்திலேயே, மிக எடுப்பாக தனித்தன்மையோடு, நவீன தோற்றத் துடன், கண்ணாடிகளும் மரப்பலகைகளும் அதிகம் கொண்டு, அமைக்கப்பட்டிருந்தது. நிலவாகை இலைகளை நிழல் உலர்த்தலாகக் காயப்போடவும், பதப்படுத்தி கோணிப்பைகளில் அடைக்கவும் வசதி யாக நீண்ட விசாலமான அறைகள் பல கட்டப் பட்டிருந்தன, அக் கட்டிடத்தில், தாளையூத்து ரயில் நிலையத்தில் எப்போதும் நிலவாகை இலை மூட்டைகள் மிகுதியாக அடுக்கிவைக்கப்பட்டிருக்கும் அவற்றில் இருந்து எழும் ஒருவித மணம் ரயில்நிலையச் சூழலில் பரவிநிற்கும். அந்த மணம் லென்னக் அண்ட்கோ கட்டிடச் சூழ்நிலையிலும், ராஜவல்லிபுரத்தில் அந்தப் பயிர்த்தொழிலில் ஈடுபட்டு, இலைகளைக் கொண்டு வந்து வீடுகளின் பெரிய ஹால்களில் நிழல் உலர்த்தலாகக் காயப்போட்டிருந்த சுற்றுப்புறங்களிலும் கவிந்து நின்றது. நிலைபெற்ற நினைவுகள் 3; 29