பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-1.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அப்படி இலைகளை உலர்த்துவதற்கென்றே சில வீடுகளில் விசாலமான முன்னறைகள், கண்ணாடிச் சட்டங்களிட்ட சன்னல் களோடு அமைக்கப்பட்டிருந்தன. நிலவாகை இலை பிசினசை வெற்றிகரமாக நடத்தி வந்த ஒரு பெரியப்பா வீடும், ஒரு சிற்றப்பா வீடும் அவ்விதமே கட்டப்பட்டிருந்தன. எனது பெரியப்பாக்களும் சிற்றப்பாக்களும் ஊரில் இருந்தபடியே விவசாயம் செய்து சம்பாத்தியம் பண்ணி நிலத்தோடு நிலம் வாங்கி வளர்ச்சி பெறமுடிந்தது. வெளியூர்கள் சென்று ஊர் விட்டு ஊர் மாறி, அரசாங்க உத்தியோகம் பார்த்த என் அப்பா, தனது தந்தை பங்கிட்டுக் கொடுத்த அரைக்கோட்டை விரைப்பாடுடனும் வீடு கட்டப்படாத காலி மனையோடும் காலம் கழித்தது, அவரது உறவினருக்கு - முக்கியமாக உறவுமுறைப் பெண்களுக்கு குறைகூறுவதற்கும் பழித்துப் பேசுவதற்கும் ஏற்ற விஷயமாகவே அமைந்திருந்தது. அப்பாவின் முதல் மனைவியாக வாழ்ந்த மாறாந்தை கல்யாணி அம்மாள் ஊரார் பேச்சுக்களை பெரிதுபடுத்தவில்லை. குழந்தை இல்லாததனால், அவள் தன் இஷ்டத்துக்குச் செலவுகள் செய்து கவலையில்லாமல் காலங்கழித்து நிம்மதியாக 'ஐயா இடம் போய்ச் சேர்ந்தாள். இரண்டாவது மனைவியாக வாய்த்த கிடாரக்குளம் சண்முகவடிவு அம்மாள் ஊரார் உறவினர் பேச்சால் பெரிதும் பாதிக்கப்பட்டாள். ஆகவே ஊரில் நமக்கு ஒரு வீடு வேண்டும் என்று எண்ணம் வளர்த்து, செயல்புரியத் தூண்டி, காரியத்தை சாதித்தாள். சிற்றப்பா ஒருவரின் உதவியோடு வீடு கட்டப்பட்டது. பெரியப்பா ஒருவரின் சகாயத்தோடு மேலும் சிறிதளவு நிலம் வாங்கப்பட்டது. அந்த அம்மாளும், ஒரு ஆண்குழந்தையைப் பெற்றெடுத்த சிறிது காலத்திலேயே, கைலாச பதவி அடைந்தாள்: அப்பா உத்தியோக நிமித்தம் வெளிஊர்களிலேயே வசித்ததால், ராஜவல்லிபுரம் வீடு பெரும்பாலும் அடைத்துக் கிடக்கவே நேரிட்டது. வயல்களை மேல்பார்வை பார்க்கும் பொறுப்பை ஏற்றிருந்த பெரியப்பாவே அந்த வீட்டையும் கவனித்துக் கொண்டார். அந்த வீட்டை ஒட்டிய முன்வீடாக தெரு ஓரத்து வீடாக அவர் வீடு இருந்தது. தம்பி வீட்டையும் அவர் தனது சொந்த உபயோகங்களுக்கு, நிலவாகை இலை காயப்போட வேகவைத்த நெல்லை உலர்த்துவதற்கு 3. 38 வல்லிக்கண்ணன்