பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-1.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இப்படிப் பல வேலைகளுக்குப் பயன்படுத்திக் கொண்டார். நிலத்தை மேற்பார்வை பார்த்ததிலும், அவர் சொன்ன கணக்குகளை ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலைமை தான் அப்பாவுக்கு இருந்தது. ஊரில் நிலம் வீடு என்று வைத்து விட்டு, வெளியூர்களில் வேலை பார்ப்பதற்காகத் தங்கிவிடுகிற சிலரின் சொத்தை அன்புகாரணமாகவும் உறவுரீதியிலும் மேல்பார்வை பார்த்து கணக்கு வைத்து உதவுவதை நெருங்கிய சொந்தக்காரர்கள் உபரித் தொழில் ஆக ஏற்றுக்கொள்வது உண்டு கிராமத்தோடு இருந்து விவசாயம் பண்ணி வாழ்க்கை நடத்துகிற அவர்களுக்கு இப்படி மேல் பார்வை பார்ப்பது என்பது லாபகரமான "சைடு பிசினஸ் ஆகிவிடுகிறது. அவர்கள் சொல்வதையும் கொடுக்கிற கணக்குகளையும் தாம் நம்பியாக வேண்டும் வெளியூரில் வசிப்பவர்கள். 'சூடு அடிக்கிற மாட்டை வாயைக் கட்ட முடியுமா? தேன் எடுத்தவன் புறங்கையை நக்காமல் இருப்பானா? போன்ற பழமொழி களைச் சொல்லி தங்களைத் தாங்களே திருப்திப் படுத்திக் கொள்வது தவிர அவர்களுக்கு வேறு வழி கிடையாது. சரி, போகுது வேறு யாரை யாவது மேனேஜ் பண்ணச் சொன்னாலும் அவர்களும் இப்படித் தான் நடந்து கொள்வார்கள். அயலான் சாப்பிடுவதை விட, நம்ம அண்ணன் தம்பி (அல்லது நெருங்கிய சொந்தக்காரர்) தான் சாப்பிட்டு விட்டுப் போகட்டுமே என்று தாராளத்தனம் காட்டக் கற்றுக் கொள்கிறார்கள் அவர்கள். 艇 4 接 தன் மூன்று பிள்ளைகளோடு ரயிலில் பயணம் செய்து வந்த களைப்போடு வீடு சேர்ந்த அம்மாவுக்கு, ராஜவல்லிபுரம் வீடு இருந்தநிலை எரிச்சலே தந்தது. தெருவடி வீட்டிலிருந்த பெரியப்பாவிடம் வீட்டின் திறவுகோலும் அரிக்கன்லாந்தரும் பெற்று வந்த அம்மா கதவுப் பூட்டைத் திறந்தும் கூடக் கதவை நன்கு திறக்க முடியவில்லை. உள்ளே எதுவோ தடங்கலாகக் கிடந்தது. பின்னாலேயே வந்த பெரியப்பா கதவை அழுத்தித் திறக்க நிலைபெற்ற நினைவுகள் : 31