பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-1.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முயன்றார். பழங்காலத்து வீட்டின் கனமான கதவு. அது உள்வாக்கில் தாராளமாக இயங்குவதற்குத் தடையாக எது கிடக்கிறது என்று கவனித்த பெரியப்பா, வேறொண்ணுமில்லே சுவரு மூலையிலே நெல்லை குவிச்சு வச்சிருக்கு அது சரிந்து வந்து கதவைத் தடுக்குது என்று தெரிவித்தார். அவர் வீட்டு வண்டிக்காரனை அழைத்து, அதை சரிபண்ணும்படி சொன்னார். அவன் சிரமப்பட்டு, கதவை ஒருக்களித்து, தனது காலி னால் நெல்லை சிறிதுசிறிதாக விலக்கினான். ஒரு ஆள் புகும் அளவுக்குக் கதவைத் திறக்க வசதிப்பட்டதும் அவன் உள்ளே நுழைந்து, நெல்லை ஒதுக்கினான். போதுமான அளவு சரிப்படுத்தியதும் கதவைத் திறந்தான். தன் வீட்டுக்குப் போய் சாக்குகள் எடுத்து வரும்படி பெரியப்பா வண்டிக்காரனை ஏவினார். அவன் சாக்குகள் கொண்டு வந்ததும், சுவர் மூலையில் அம்பாரமாகக் கொட்டிக் கிடந்த நெல்லை சாக்குகளில் அள்ளி மூட்டைகளாக்கும்படி சொன்னார். சிறிது நேரத்தில் அந்த வேலை முடிந்தது. 'வயல் அறுவடையானதும் நெல்லை வியாபாரியிடம் விலைக்குக் கொடுக்கலே. விலைவாசியை பார்த்துக் கொண்டு மெதுவாப் போடலாமேன்னு மூலையிலே குவிச்சு வச்சிருக்கோம் என்று பெரியப்பா விளக்கினார். இப்ப ராத்திரிக்கு நம்ம வீட்டிலேயே சாப்பிடலாம் என்றும் கூறினார். அம்மாவும் இசைவு தெரிவித்தாள். சாப்பாடு முடித்து வீடு திரும்பியதும் அம்மா வீட்டை சுத்தம் செய்வதிலும் ஒழுங்குபடுத்துவதிலும் முனைந்தாள். பெரியப்பா பற்றியும் மற்றுமுள்ள சொந்தக்காரர்கள் பற்றியும் குறைகூறிக்கொண்டே வேலைகளை செய்தாள். அம்மாவின் சுபாவம் அப்படி பார்க்கப் போனால், பொதுவாகப் பெண்களின் இயல்பே அவ்வாறு தான் இருக்கிறது. தான் புகுந்த வீட்டைச் சேர்ந்தவர்களை, கணவனின் உற்றார் உறவினரை சதா குறைகூறுவதும் அவர்கள் பேரில் குற்றம் சுமத்துவதும் தாங்கள் பிறந்த வீடு, பிறந்த ஊர், அங்கே உள்ள சொந்தக்காரர்கள் பற்றிப் பெருமை பெருமையாகப் பேசுவதும் பெண்களின் சுபாவமாக இருக்கிறது. கணவனின் உறவினரும் ஊர்க்காரர்களும், மணமாகி வீட்டுக்கு 32 : வல்லிக்கண்ணன்