பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-1.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பார்த்து மகிழ்ந்தோம் அந்த வழியே தினசரி மாலைநேரத்தில் ஒரு வெள்ளைக்காரத் துரை மிடுக்காக நடந்து போவது அதிசயமாகப் படும் அரைக்கால் சட்டை வெள்ளை நிறச்சட்டை காலில் பூட்ஸ், தலையில் தொப்பி அணிந்து, தோளில் ஒரு துப்பாக்கியைச் சுமந்தபடி அவர் போவார். அவர் வேட்டைக்குப் போய் வருவதாகப் பெரியவர்கள் சொல்வது உண்டு. ஒருநாள் கூட அந்தத் துரை வேட்டையாடிய பிராணி எதையும் கொண்டு சென்றதில்லை. மழை பெய்த நாள்களில், அருகே சற்று தள்ளியிருந்த பள்ளங்களில் தண்ணிர் அதிகம் தேங்கிக்கிடக்கும் அதிகம் மழை பெய்தால் அந்தப் க்கம் ஒடை மாதிரி செம்மண் தண்ணீர் ஒடும். அதில் ஆறு கால் பூச்சிகள் சில தென்படும். அவை நீர்ப்பரப்பின் மீது வேகமாகச் சுற்றி لاس அவை எழுத்தாணிப் பூச்சிகள் அனா ஆவன்னா எழுதுகின்றன என்று பெரிய பையன்கள் சொல்வார்கள். தண்ணிர் ஒரத்தில் நின்றபடி அனா எழுது ஆவன்னா எழுது ஈ எழுது என்று உரக்கக் கத்து வார்கள். பூச்சிகள் அப்படியும் இப்படியுமாக எழுதுவது போல் சுற்றும் பார்த்தியா, அனா எழுத்து இதோ ஈ எழுதிட்டுது என்று உற்சாகமாகக் கூவிக் கைதட்டுவார்கள் பையன்கள். பெரிய பையன் ஒருவன் இருந்தான். பன்னிரண்டு பதின்மூன்று வயது இருக்கலாம். குறும்புத்தனங்கள் மிகுதியாகச் செய்வான். என் அப்பா அவனை கோப்பன்! மலைக்கோப்பன் என்று குறிப்பிடுவது வழக்கம் ஒரு சமயம் அவன் ஒரு பறவையை பிடித்து வந்து காட்டினான். அழுத்தமான நீலமும் கபிலநிறமும் வெண்மையும் கலந்து பளிச்செனத் தோன்றிய தடிப்பறவை. அது காடை என்று அவன் சொன்னான். பறவையை இரு கைகளிலும் அமுக்கிப் பிடித்தவாறு எல்லோரிடமும் காட்டி மகிழ்ந்தான். பறவை பயத்துடன் மிரள மிரள விழித்தது பரிதாபகரமாக இருந்தது. மழைநாள்களில் ஒருநாள் கருடபட்சி (கிருஷ்ணப் பருந்து) ஒன்று, அடிபட்டு நோவுற்றது போல, கிருஷ்ணன்கோயிலில் அடைக்கலம் புகுந்தது. கோயிலின் முகப்பில், கொடிமரத்தின் அருகிலேயே, அது அசையாமல் இருந்தது. பலரும் அதை வேடிக்கை பார்க்கக் குழுமி னார்கள். நாங்களும் தினசரி அந்தப் பட்சியை பார்த்து வந்தோம். அதற்கு பக்தர்கள் பால், பழம், கோயில் பிரசாதம் எல்லாம் 38 : வல்லிக்கண்ணன்