பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-1.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என் தாத்தா முத்தைய பிள்ளையின் அப்பா பெயர் கோபால கிருஷ்ணபிள்ளை முத்தையபிள்ளைக்கு மகன்களும் மகள்களும் பலர். அவர் மரபுப்படி தன் மூத்த மகனுக்கு தன் தந்தையின் பெயரான கோபாலகிருஷ்ணன் என்பதை வைத்தார். அந்த மகன்வழிப் பேரன்களும், இதர மகன்கள் மகள்கள் பிள்ளைகளும் மரபுரீதியாக, குடும்பத்திற்கு ஒருவர் கோபாலகிருஷ்ணன் என்ற பெயரை ஏற்றார்கள். எனக்குக் கூட முதலில் கோபாலகிருஷ்ணன் எனும் பெயர் தான் இடப்பட்டிருந்தது. பின்னர் என்னை பள்ளிக்கூடத்தில் சேர்த்தபோது என் அப்பா என் பெயரை கிருஷ்ணசுவாமி என்று மாற்றிவிட்டார். அவ்வூரில் கிருஷ்ணசுவாமி என்ற புதுப்பெயரை முதன்முதலாகப் பெற்றவன் என்ற பெருமை எனக்கு வந்து சேர்ந்தது. சிவப்பற்று மிகுதியாக உடைய சைவவேளாளர் குடும்பத்தில் இப்படி வைஷ்ணவப் பெயர் ஏன் புகுந்தது எப்படி இந்தப் பெயரை இட்டார்கள் என்று பிற்காலத்தில் என்னிடம் சிலர் கேள்வி கேட்பது சகஜமாயிற்று. அதற்கு சுவாரசியமான ஒரு வரலாற்று நிகழ்வுதான் அடிப்படைக் காரணமாகும். சுமார் இருநூறு அல்லது இருநூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்னர், கார்காத்த வேளாளர் குடும்பத்தினர் சிலர் வடக்கேயிருந்து புறப்பட்டு தென்தமிழ் நாடு நோக்கி வந்தார்கள். அவர்கள் பந்தல் குடி என்ற ஊரிலிருந்து வந்ததாகச் சொல்லப்படுகிறது. வழியில் ஆற்றங்கரைத் தோப்பு ஒன்றில் தங்கினார்கள். அதிகாலை நேரத்தில், உதயமாகி எழுந்து மேலேறிய சூரியனின் பொற்கிரணங்கள் பட்டு ஒளிர்ந்த மாமரங்களில் ஒன்றின் ஒரு கிளையிலிருந்து பளபளப்பான ஒளி பட்டுத் தெறித்தது. அதை கூர்ந்து நோக்கிய ஒருவர் பார்வையில் ஒரு குரங்கு தென்பட்டது. அக் குரங்கு ஒரு செம்பைப் பற்றியிருந்தது. அச் செம்பின் மீது வெயில் பட்டதனால் தான் தகத்தக ஒளி எழுந்தது என்பதை அவர் கண்டு கொண்டார். அது தங்கச் செம்பாக இருக்க வேண்டும் என்று அவர் எண்ணினார். கீழே குனிந்து கற்களை எடுத்தார். ஒன்றின் பின் ஒன்றாகக் கற்களை குரங்கை நோக்கி வீசினார். மிரட்சியடைந்த குரங்கு அவரை நோக்கி செம்பை விட்டெறிந்துவிட்டு, வேறு கிளைக்குத் தாவியது. அவர் அந்தச் செம்பைக் கைப்பற்றினார். பார்த்தார். சுமாரான 40 : வல்லிக்கண்ணன்