பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-1.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திடுக்கிட்டு விழித்தெழுந்த பிள்ளை கோபால் சாமி உருவத்தின் முன் விழுந்து கும்பிட்டார். மனைவியிடம் முனிவர் வந்து விளக்கியதைச் சொன்னார். தனது வழக்கமான அலுவல்களில் ஈடுபட்டார். அவர் குழந்தைக்கு கோபாலகிருஷ்ணன் என்ற பெயரே சூட்டப் பெற்றது. அதன் பின்னர் அவர்கள் வம்சத்தில், முதல் பிள்ளைக்கோ அல்லது ஏதாவது ஒரு குழந்தைக்கோ, கோபால கிருஷ்ணன் என்று பெயரிடுவது ஒரு மரபு ஆகி நிலைத்துவிட்டது. அந்தப் பெரியவர் வழிவந்த குடும்பத்தார் ஒவ்வொருவர் வீட்டிலும் குலதெய்வமான கோபாலகிருஷ்ணனை முறைவைத்து பூஜைகள் செய்யும் வழக்கமும் ஏற்பட்டது. அவர்கள் வீடுகளில் ஒரு அறையில் முக்கியமான இடத்தில் சுவரில் சாமி சேர்மாடம் என்று ஒரு அமைப்பும் அதனருகில் பூஜைச் சாமான்களை வைப்பதற்கான மாடக்குழியும் கட்டி வைத்திருக்கும். அந்தக் குடும்பத்தில் ஏதாவது முக்கியமான விசேஷம் வந்தால், கோபால கிருஷ்ணன் உருவம் பதித்த செம்பை, அது இருக்கும் வீட்டிலிருந்து எடுத்து வந்து, அதற்கான மாடத்தில் வைத்து, உரிய முறையில் பூஜை செய்வார்கள். வேறொரு வீட்டில் விசேஷ நிகழ்வு வருகிற வரை கோபால சாமி அந்த வீட்டிலேயே தங்கியிருக்கும். வீட்டுக்காரரே பூஜை செய்வதற்குப் பதிலாக, பூஜை செய்வதற்கென்றே ஒரு தனி ஆள் நியமிக்கப்பட்டார். தினந்தோறும் அவர் குளித்து சுத்தமாக வந்து பக்தியோடு பூஜை பண்ணுவார். வீட்டுக்காரர் வெண்ணெய், சர்க்கரை, பால்பழம் வெற்றிலை, ஊதுவத்தி, சூடன் முதலிய பூசைப் பொருள்களை குறைவின்றி அளித்துவர வேண்டும். தினசரி அந்த அறையில் தரையை நன்கு மெழுகிக் கோலமிட்டு சுத்தமாக வைத்திருக்க வேண்டும். காலப்போக்கில் குடும்பங்களில் பொருளாதார சிரமங்கள் ஏற்பட்ட போது, இப்படி பூஜைக்கு ஏற்பாடு செய்வதும் சில சமயங்களில் சுமையாகத் தோன்றத் தொடங்கியது. அதனால் கோபாலசாமியை ஒரு வீட்டிலிருந்து மற்றொரு குடும்பத்துக்குக் கொண்டு சென்று பூஜை பண்ணுவதில் ஒருவித மெத்தனம் ஏற்படலாயிற்று. ஒருவர் ஒரு விசேஷத்துக்காக சாமியை எடுத்து வந்தால், அவர் வீட்டிலேயே சாமி தொடர்ந்து பல மாதங்கள் தங்கிவிடக் கூடிய நிலைமை உருவாயிற்று. கிருஷ்ண ஜயந்தி வருகிற போது, அந்த உருவம் எந்த விட்டில் தங்கியிருக்கிறதோ அந்த வீட்டினர் அதிகம் செலவு செய்து கிருஷ்ணன் நிலைபெற்ற நினைவுகள் 3; 45