பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-1.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வந்து சேர்ந்தனர். எனவே, தினசரி காலையில் குளிப்பதற்கு வண்டியில் ஆற்றுக்குப் போய்வர முடிந்தது. ஊருக்குத் தெற்கே ஒரு மைலுக்கு அப்பால் ஓடிய தாமிர வர்ணி ஆறு அந்நாள்களில் அழகாய், தூயதாய், இனிதாய் விளங்கியது. ஆற்றுக்குப் போகிறரோடின் ஒரு புறம் வாய்க்கால் ஓடியது. இரு பக்கங் களிலும் கண்ணெட்டும் துரமெலாம் பச்சைப்பசிய வயல்கள். ரோடின் ஓரங்களில் வரிசையாய் தென்னைமரங்கள் ஓங்கிவளர்ந்து நின்றன. மேற்கே வெகு தூரத்தில் மிடுக்காக எழுந்து நின்று நெடிய வரிசையாய் காட்சி தந்த மேற்குத் தொடர்ச்சி மலையின் பகுதி வனப்பு மிகுந்த இயற்கைக் காட்சி. ஆற்றில் தண்ணிர் குறைவாக ஓடினாலும், மணல்படுகையில் பாய்ந்ததால் மிக சுத்தமாகத் தெளிந்து காணப்பட்டது. மணல் வெகு அதிகமாகவே எங்கும் பரந்து விரிந்து கிடந்தது. தண்ணிர் ஒடும் இடத்தில் மணல் வர்ணமயமாக-தாமிரத்துகள்கள் படிந்து தனியொரு நிறத்தில் - அழகாக விளங்கியது. நெடுகிலும் இந்தத் தோற்றம் கொண்டிருந்ததாலேயே, பொருனை நதி தாமிரவர்ணி எனும் பெயர் பெற்றிருந்தது. r கால ஓட்டம் பெரும் மாறுதல்களை விளைவித்தது. ஆற்றின் ஆரம்ப இடத்தில், பாபநாசத்தில், அணைகட்டப்பெற்று நீர்தேக்கி வைக்கப்பட்டது. ஆற்றில் நீரோட்டம் ஒழுங்காக இல்லாமலும் குறை வாகவும் இருக்கும் மழைக்காலத்தில் நீர்ப்பெருக்கு அதிகமாகவும் சிற்சில சமயங்களில் மிக வெள்ளமாகவும் ஒடும். மேல்மணல் வரத்து இல்லாது போய், கிடந்த மணல் பரப்பு மாறுதலுக்கு உட்பட்டு, அங்கங்கே சேறும் சகதியும் படிந்து ஆற்றுப் படுகையே மோசமாகிவிட்டது. கண்டகண்ட செடிகொடிகள் ஆற்றினுள்ளும் கரைகளிலும் மண்டி வளரலாயின. நீர்க்கருவை அல்லது வேலிக்கருவை என்று சொல்லப்படுகிற விஷமுள்ளுச் செடிகள் களையாய், பேயாய், எங்கெங்கும் வளர்ந்து பரவிவிட்டன. ஆற்றின் கரை மீது ஒரு ஊரில் காகித உற்பத்தி ஆலை தலையெடுத்து, அதன் கழிவு நீரை ஆற்றில் கலக்க விட்டது. திருநெல்வேலி நகரப்பகுதிகளின் சாக்கடை நீரும் பெரும் அளவில் ஆற்றில் வந்து கலக்கலாயிற்று. இதனால் எல்லாம் ஆற்றுப் படுகை அசிங்கப் பரப்பாக மாறிப்போயிற்று. தாமிரவர்ணி என்ற காரணப் பெயர் கூட எப்படியோ தாம்பரபரணி என்று மாற்றம் பெற்றுவிட்டது. நிலைபெற்ற நினைவுகள் கீ 47