பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-1.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இவை எல்லாம் பிற்காலத்தில் நிகழ்ந்தவை. எனது பிள்ளைப் பிராயத்தில் ஆறு அருமையான நீரோட்டமாகத் திகழ்ந்தது. ராஜவல்லிபுரம் ஊருக்கு வருகிற சாலை, ஆலமரங்கள் ஓங்கி வளர்ந்து நிழல்பந்தலிட்ட அழகான சூழலாக இருந்தது. ஊரைவிட்டு கிழக்கே வெளியேறுகிறரோடிலும் வரிசையாக ஆலமரங்கள் நின்றன. வருகிற வழிநெடுக பெரியகுளம் என்கிற குளத்தில் நீர் அலையிட்டுப் பரந்து காட்சிதரும் வெளியேறுகிற கிழக்குப் பக்கத்தில் நயினார்குளம் என்ற சிறியகுளம் உண்டு. அதிலும் ஒரளவு தண்ணிர் கிடக்கும். குளங்களில் தண்ணிர் பெருகி, வயல்களில் நெல்பயிர் வளர்ந்து பச்சைப்பசேல் எனக் குளுமைக் காட்சியாய் விளங்குகிற காலத்தில், ராஜவல்லிபுரம் வசீகரவனப்புடன் திகழும் ஆலமரங்களில் பழங்கள் நிறைந்து விளங்கும் மாதங்களில், அவற்றைத் தின்பதற்காகக் கூடுகிற காகங்கள், மைனாக்கள் எழுப்புகிற உவகைக் கூச்சல் சாலையை எந்நேரமும் கலகலப்பானதாக ஆக்கும். வண்டிகள், பயணிகள் நடமாட்டம் அதிகமிராது. பெரிய பெரிய ஆலமரங்களில் விழுதுகள் மிகுந்து தொங்கும். பையன்கள் அவற்றைப் பிடித்துக் கொண்டு ஊசலிட்டுக் களிப்பர். விழுதுகளின் மிருதுவான பகுதிகளில் சிறுசிறு குச்சிகள் நறுக்கி, காவையில் பல்துலக்க உபயோகிக்கும் பழக்கம் அந்நாள்களில் இருந்தது. ஆலும் வேலும் பல்லுக்குறுதி என்பது மூதுரை. அது கிராமங்களில் நடைமுறைப் படுத்தப்பட்டு வந்தது. வீட்டில் புதியபகுதியின் கட்டுமானப் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வந்தன. சுண்ணாம்பை அரைத்துக் காரை தயாரிப்பதற்காக, முற்றத்தில் பெரிய அம்மியும் குழவியும் கிடந்தன. பகலில் அதில் ஆள் சுண்ணாம்பு அரைத்துக் கொண்டேயிருக்கும். சுவர் கட்டுவதற்காக வானம் தோண்டி, சில ஆள்கள் மண்ணை அள்ளி வெளியே கொட்டிய வாறு இருப்பார்கள். இவையெல்லாம் வேடிக்கை பார்ப்பதற்குரியனவாக இருந்தன. அப்பா விசேஷமான ஒரு வேடிக்கை பண்ணி மகிழ்வது உண்டு. முன்வீட்டு தெருஒர வீட்டின்) பெரியப்பாவின் மனைவி - பெரியம்மை - பேராசைக்காரி. இங்கே எங்கள் வீட்டில் ஆழமாகப் பள்ளம் பறிப்பதைப் பார்த்த அவளுக்கு ஏனோ புதையல் நினைப்பு மனசில் 48 வல்லிக்கண்ணன்