பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-1.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூசிக்கொண்டு, உரத்தகுரலில் வேயிரு தோளிபங்கன், விடமுண்ட கண்டன். . . ... ஞாயிறு, திங்கள், செவ்வாய் - அவை நல்ல நல்ல; புதனொடு வியாழம் வெள்ளி சனியும் அவை நல்லநல்ல என்று, அவருக்கென அமைத்துக் கொண்ட ராகத்தில் பாடியவாறு, பள்ளிக்கூடம் முன் நடந்து போவார். அவரும் அதிசயமாகத் தான் தென்பட்டார். எல்லோருக்குமே உண்மையான அதிசயம் அந்த ஊர் சிவன் கோயிலில் காணப்பட்டது. கோயில் பிரகாரத்தில், மதிலை ஒட்டி, சில மரங்கள் நின்றன. பிரகாரத்தை விட்டு விலகி அமைந்திருந்த தோட்டம் அது மரங்களில் ஒரு மாமரம் அனைவரது கவத்தையும் கவர்ந்தது பேச்சுக்குப் பொருளாக இருந்தது. “... அனைத்து மாமரங்களையும் போலவே தோற்றம் தந்த அந்த மரம் விசேஷமான ஒரு தன்மையைப் பெற்றிருந்தது. அதில் காய்த்த மாங்காய்கள் இதர மரங்களின் காய்களை விடப் பெரிதாக இருந்தன. சாதாரண இளநீர் காய் அளவு பெரியன. காய்களின் மேல் முழுவதும், குஷ்டரோகம் பெற்றவனின் உடம்பில் காணப்படுவது போல முண்டுகளும் முடிச்சுகளும் துருத்தி நிற்கும். அந்த மரத்தின் பழங்கள் பளிர்நிறம் பெற்ற சதைப் பிடிப்பு மிக்கதாய், சுவை மிக உடையதாய் இருந்தன. அம்மரத்தை குறைநோக்காட்டு மாமரம் குட்டநோக்காட்டு மாம்பழம் காய்க்கிற மரம் என்றே ஜனங்கள் குறிப்பிட்டு வந்தார்கள். அந்த மாமரத்தில் காய்கள் அப்படிக் காய்ப்பதற்கு ஊர் மக்கள் ஒரு கதை சொல்வது வழக்கம். ஒரு சமயம் எங்கிருந்தோ ஒரு பஞ்சப்பரதேசி அந்த ஊருக்கு வந்து சேர்ந்தான். சிவன் கோயில் திண்ணையில் படுத்துத் துரங்கலாம் என்று வந்தவன் பார்வையில், கோயில் தோட்டத்தில் நின்ற மாமரமும் கிளை அடர்ந்து தொங்கிய காய்களும் பட்டன. ஒவ்வொரு காயும் பெரிய சொம்பு தண்டிக்கு இருக்குதே என்று அவன் அதிசயித்தான். ஏயப்பா, எவ்வளவு பெரிய காயி! அதோ ஒன்றிரண்டு பழுத்துக் கிடக்குதே! அதிலே ஒரு பழம் கிடைத்தால் போதும் தின்றால் வயிறு கம்முனு ரொம்பி விடும் என்று முனகினான். ஏக்கப் பெருமூச்சுவிட்டபடி படுத்தான். மறுநாள் காலையில் அந்தப் பரதேசி எழுந்து, மாமரத்தையும் அதன் காய்களையும் பழங்களையும் பார்த்துப் பெருமூச்சுவிட்டவாறே நடந்தான். அவன் கண் கொள்ளிக்கண் அதன் பார்வை வெப்பம் அந்த நிலைபெற்ற நினைவுகள் 38 53