பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-1.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மரத்தை பாதித்தது. காய்கள் மீதும் பழங்களின் மீதும் அம்மை கண்டது மாதிரி கொப்புளம் கொப்புளமாக துருத்தல்கள் கிளம்பின. பார்த்தவர் களுக்கு அவை குஷ்டரோகப் புண்களை நினைவுபடுத்தின. அதுமுதல் அந்த மரத்தில் காய்கள் அந்தவிதமாகவே காய்த்தன. பரதேசியின் கண்ணேறு பட்டதின் கோளாறு தான் அந்த மாற்றம் என்று ஜனங்கள் நம்பினார்கள். அந்த மரத்துக்கு குட்டநோக்காட்டு மாமரம் என்ற பெயரும் நிலைத்துவிட்டது. பெருங்குளம் மதகுப் பாலத்தின் மீது நடந்து போனால், அடுத்த பக்கம் பண்ணையவிளை என்ற ஊர் இருந்தது. அங்கு பனைமரங்கள் அதிகம் பனையேறிகளான நாடார்கள் மிகுதியாக வசித்தார்க்ள். அவர் களில் அநேக குடும்பத்தினர் கிறிஸ்தவர்கள். அவர்களுக்காக அவ்வூரில் ஒரு சர்ச் (மாதா கோயில்) கட்டப்பட்டிருந்தது. ஒருசமயம் வண்டிக்காரனுடன் என் அண்ணனும் நானும் பண்ணையவிளை போனோம். சர்ச்சை பார்த்தோம். அதன் பெரிய பெரிய சன்னல்களும் அவற்றில் பொருத்தப்பட்டிருந்த வகை வகையான வர்ணக் கண்ணாடிகளும் ஆச்சர்யம் தந்தன. வாய்க்காலுக்கு தினம் இரண்டு பெரிய வாத்துகள் வருவதுண்டு. அவற்றை ஊசி வாத்துகள் என்று பையன்கள் குறிப்பிடுவர். அதன் மூக்கு நீண்டிருந்ததால், அந்த இன வாத்துக்கு அந்தப் பெயரை அவர்கள் சூட்டியிருந்தார்கள். அவற்றை வேடிக்கை பார்க்கும் பையன்கள் அருகில் சென்றால், அவை கூச்சலிட்டபடி மூக்கினால் குத்த வருவதுபோல், இறக்கைகளை படபடத்துக் கொண்டு முன்னே ஓடி வரும் பையன்கள் பயந்தடித்துப் பின்வாங்கி ஓடுவார்கள். எல்லாம் வேடிக்கையாக இருக்கும் வேடிக்கையாகத் தோன்றினாலும் வேதனை தரக்கூடிய விஷயமாக இருந்தது ஒரு பள்ளிக்கூடம் நானும் அண்ணனும் படித்த பள்ளிக் கூடம் பெரிது. அது அக்கிரகாரத்தின் ஒரு ஓரத்தில் இருந்தது. இந்தச் சிறு பள்ளிக்கூடம் வேறொரு மூலையில் அமைந்திருந்தது. பழங்காலத்து அண்ணாவி பள்ளிக்கூடம் ஒருநாள் ஒரு பையன் காலில் விலங்குமாட்டி, அதனோடு இணைக்கப்பட்டிருந்த ஒரு மரக்கட்டையை கைகளில் பற்றியபடி சிரமத்தோடு நடந்து பள்ளிக்கூடத்துக்கு வந்து கொண்டிருந்தான். 54. 8 வல்லிக்கண்ணன்