பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-1.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவன் ஒழுங்காக பள்ளிக்கு வரமாட்டான், சேட்டைகள் பண்ணித் திரிந்தான். அதற்கு தண்டனையாக இப்படி செய்யப் பட்டிருக்கிறது. இதுக்குப் பெயர் கோதண்டம் என்று விஷயம் தெரிந்த ஒரு பெரியவர் விளக்கினார். பள்ளிக்கூடத்துக்கு டிமிக்கி கொடுக்கிற பையன்களுக்கும், ஒழுங்காகப் படிக்காமல் இடக்குப் பண்ணுகிறவர்களுக்கும் இதை விடக் கடுமையான தண்டனைகளை வாத்தியார் கொடுப்பது வழக்கம் என்றும் அவர் சொன்னார். அவற்றில் ஒன்று எமகண்டம் என்றும் கூறிய அவர், என்னையும் அண்ணனையும் அந்தப் பள்ளியின் அருகே அழைத்துச் சென்றார். உள்ளே பார்க்கும்படி செய்தார். சின்னக் கட்டிடம் தான். அதன் உத்திரத்தில், ஒரு பையனை கட்டித் தொங்கப் போட்டிருந்தார்கள். அவன் கைகளும் கால்களும் தனித்தனிக் கயிற்றால் உத்திரத்தோடு பிணைக்கப்பட்டிருந்தன. வளைந்து தொங்கிய அவன் கீழே விழுந்தால் அவனை வரவேற்பதற்கு தரைமீது மணல் பரப்பி அதில் எழுத்தாணிகளும் முள்ளுகளும் நட்டுவைக்கப் பட்டிருந்தன. அந்தச் சிறுவன் வலியினாலும் பயத்தாலும் கண்ணிர் வடித்துக் கொண்டிருந்தான். அண்ணாவி அமைதியாக உட்கார்ந்து பாடம் நடத்திக் கொண் டிருந்தார். எமகண்டம் அனுபவித்துக் கொண்டிருந்த பையனைப் பார்க்கையில் எனக்கும் அழுகை வந்தது. பெரியவர் எங்களை அங்கிருந்து நகர்த்தி, கோயில் பக்கம் அழைத்துச் சென்றார். இந்தப் பள்ளிக் கூடத்தில் ஏரான் முறை அமுலி ல் இருந்தது என்று சொல்லி, அவர் அதை விளக்கினார். பையன்கள் நாள்தோறும் ஒழுங்காகவும் சீக்கிரமாகவும் பள்ளிக்கூடத்துக்கு வரவேண்டும் என்ற கட்டுப்பாடு அங்கே இருந்தது. சீக்கிரமாக, பள்ளிக்கூடம் திற்பதற்கு முன்னரே, முதலாவதாக வருகிற பையன் ஏரான் எனக்குறிக்கப்படுவான். அவனை அடுத்து ஒவ்வொருவ ராக வந்து சேர்கிற பையன்கள் எண்வரிசைப்படி குறிக்கப்படுவர். பள்ளிக்கூடம் திறந்ததும், அண்ணாவி வருகைப்பட்டியலை வாசிப்பார். அவர் கையில் பிரம்பு பிடித்திருப்பார். ஏரான் ஆன பையன் கையில் பிரம்பால் லேசாகத் தடவுவார் அவர். இரண்டாவது வந்தவனுக்கு மெதுவாக ஒரு அடி தரப்படும். இப்படி வரிசைப்படி, ஒவ்வொருவனுக்கும் அடி கொடுக்கப்படுகிற போது, நிலைபெற்ற நினைவுகள் 38 55