பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-1.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவன் சாதாரணத் தோற்றமே கொண்டிருந்தான். பழைய கோட்டு அணிந்திருந்தான். முதுகில் ஒரு பெட்டி துணிப்பட்டையால் அது உடம்போடு இணைக்கப்பட்டிருந்தது. அப்பாவை கும்பிட்டு, ஒரு நோட்டை காட்டினான். நான் இப்படி பெரியமனிதர்கள் முன்னிலையில் ஜாலவித்தை காட்டிப் பிழைக்கிறவன். என் வித்தைகளை பார்த்து மகிழ்ந்த பலரும் என்னை பாராட்டி இந்த நோட்டில் எழுதி யிருக்கிறார்கள். உங்கள் முன்பும் வித்தைகாட்ட அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டான். அப்பா அனுமதிக்கவும் அவன் பலவித வித்தைகள் செய்து காட்டினான். வாயிலிருந்து ரிப்பன் போல், வர்ணம் வர்ணமான தாளை வெளியே இழுத்துக் கொண்டே இருந்தான். முடிவற்று அது வந்தவாறு இருந்தது. பிறகு அவனாக அதை நிறுத்தினான். கையிலிருந்த பொருளை காணாமல் போகச் செய்தான். திரும்பவும் அதை வரவழைத்தான். பெட்டிக்குள் பெட்டிக்குள் பெட்டி என்று பல பெட்டிகளை எடுத்துக் காட்டினான். முடிவில் வந்தது ஒரு குட்டிப் பெட்டி அதைத் திறந்ததும் அதுக்குள் ஒரு மோதிரம் இருந்தது. இவ்விதம் பல தந்திர வேலைகள் செய்து காட்டினான். மாயமந்திரம் என்றான். அப்பா அவனுக்கு ஐந்து ரூபாய் கொடுத்து அனுப்பினார். இது 'கண்கட்டிவித்தை மேஜிக் என்று சொன்னார். அதை எல்லாம் அவன் எப்படிச் செய்தான் என்பது புரிந்து கொள்ளமுடியாத அதிசயமாகத் தான் இருந்தது எனக்கு. பெருங்குளம் ஊருக்கு நாடகக் குழு ஒன்று வந்தது. எவராவது ஒருவர் நாடகக் கான்ட்ராக்டர் என்று சொல்லித் திட்டமிடுவார். இது போன்ற ஸ்பெஷல் நாடகம்களில் நடிப்பதற்கென்றே நடிகர்களும் நடிகைகளும் இருந்தார்கள். வெவ்வேறு ஊர்களில் வசித்த அவர்களை தொடர்பு கொண்டு, ஒன்று சேர்த்து, இத்தனை நாடகங்கள் நடிக்க வேண்டும், இத்தனை நாள்கள் நாடகம் நடத்த வேண்டும், சம்பளம் இவ்வளவு என்று கான்ட்ராக்டர் ஒப்பந்தம் செய்து கொள்வார். குழுவுக்கு ஏதேனும் பெயர் இருந்தாலும் இருக்கும் அல்லது ஒப்பந்தகாரர் பெயருடன் ஸ்பெஷல் டிராமா செட் என்று சேர்த்துச் சொல்லப்படும். ஒரு ஊரில் நாடகம் வெற்றிகரமாக - அதாவது லாபகரமாக- நடந்தால், அவர் தொடர்ந்து வேறொரு ஊரில் நாடகம் நடத்த ஏற்பாடு செய்வார். நடிகர் நடிகையருக்கும் தொடர்ந்து பிழைப்பு நடக்கும் நிலைபெற்ற நினைவுகள் 38 59