பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-1.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிப்பாளர் குறிப்பு 懿 வல்லிக்கண்ணனின் 86ஆவது பிறந்த நாளன்று இக்குறிப்பு எழுதப் படுவதிலும், அவருடைய சுயசரிதையின் முதல் பாகத்தைக் கொண்டு வருவதிலும் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம். எளிய மனிதர் அவர். அதேசமயம் தன் நம்பிக்கைகளுக்காக முழு வாழ்க்கையையும் ஒப்புக் கொடுத்த காந்தி யுக லட்சிய மனிதர். அவர் தன்னைப் பற்றி இப்படிக் கூறுகிறார். வாழ்க்கை நதியின் ஒரத்தில் ஒதுங்கி நின்று அனைத்தையும் அனைவரையும் சும்மா வேடிக்கையாகப் பார்த்துத் திருப்தி அடைந்த எளியவன் நான். இப்போதும் அப்படித்தான் இருக்கிறேன்.' வேடிக்கை பார்க்கும் இந்த எளிய மனிதரின் சுயசரிதை இது. எனினும், வேடிக்கை மனதின் பார்வையிலிருந்து உருவான பதிவு என்பதாலேயே அக்கால கலை, இலக்கிய, சமூக, கலாச்சார, வாழ்வியல் வரலாறாகவும் இச்சரிதை விரிந்திருக்கிறது. இச்சுயசரிதை இரண்டு பாகங்களாக அமைகிறது. முதல் பாகத்தில், அவர் சரிதையினுடாக, தென் தமிழகக் கிராமங்கள், ஊர்கள், சிறுநகரங்கள் ஆகியவற்றின் மாற்றங்களும், அவற்றில் வாழ்ந்த மனிதர்கள் வாழ்வில் நிகழ்ந்த மாற்றங்களும் அற்புதமாகப் பதிவாகியிருக்கின்றன. ஒரு காலகட்டத்தின் கதையாக இது உருவாகியிருக்கிறது. அவருடைய பிறப்பிலிருந்து, எழுத்துத் துறையில் வளர்ந்து முன்னேறுவதற்காக 3 ஆண்டுகள் 7 மாதங்கள் பார்த்த அரசாங்க ஆபிஸ் குமாஸ்தா வேலையைத் தன் மனக்குரலுக்கு செவி சாய்த்து உதறிய காலம் வரையான அவர் வாழ்க்கைக் கட்டம் முதல் பாகமாக அமைந்திருக்கிறது.