பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-1.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இந்தக் காட்சி என் நினைவில் ஆழமாகப் பதிந்து விட்டது. நான் தினமும் நாடகம் பார்க்க வேண்டும் என்று போனேன். ஆனாலும் எந்த நாடகத்தையும் முழுமையாகப் பார்த்ததில்லை. கால்வாசி, அரைவாசி தான் பார்த்திருப்பேன். ஒவ்வொரு நாடகத்திலும் என்னை பயப்படுத்தும் - பயந்து அலறச் செய்யும்- காட்சி ஏதாவது வந்துவிடும் அல்லது கோரத் தோற்றம் உடைய நடிகன் எவனாவது வந்து கூச்சலிடுவான். அதைக் கண்டும் ஓவென்று அழத்தொடங்குவேன். அவ்வளவு பயந்தாங்கொள்ளி யாக இருந்தேன். உடனே அப்பா வேலைக்காரனை கூப்பிட்டு என்னை வீட்டுக்கு இட்டுச் செல்லும்படி சொல்லிவிடுவார். ஒவ்வொரு நாடகத்தின் போதும் இது நடந்தது. எனது இந்தப் போக்கு வண்டிக்காரனுக்கு எரிச்சல் ஊட்டுவதாக இருந்தது. அவன் சுவாரசியமாக நாடகம் பார்த்துக் கொண்டிருந்தான். அதைக் கெடுத்தது எனது அழுகை நாடகத்தை தொடர்ந்து பார்க்க முடியாதபடி என்னை வீட்டுக்குக் கூட்டிப் போகும் வேலை அவனுக்குக் கிட்டியது. என்னை கூட்டிப் போகிறபோது, ஏன் அழுகிறே? இதுலே பயப்பட என்ன இருக்கு? சும்மா நாடகம் தானே! என்பான். இனிமேல் பயப்படும்படியா எதுவும் வராது; இங்கேயே இருந்து நாடகம் பார்க்கலாமா என்று கெஞ்சுவான். நான் அழ ஆரம்பிப்பேன். எரிச்சலுடன் முனகியபடியே என்னை தூக்கிச் செல்வான். நீ எதுக்கு நாடகம் பார்க்கவாறே? வீட்டிலேயே இருந்திருக்கலாமே என்று கசப்பாகக் கூறுவான். என்னை விட்டுவிட்டு அவன் நாடகம் பார்க்க ஒடுவான். இவ்விதம் ஒவ்வொரு நாடகத்தின் போதும் நிகழவே, நான்கு நாடகங்களுக்குப் பிறகு நீ இனிமேல் நாடகம் பார்க்க வரவேண்டாம்: வீட்டிலேயே படுத்துத் துரங்கு என்று அப்பா கண்டிப்பாகச் சொல்லி விட்டார். வண்டிக்காரனுக்கும் நிம்மதி ஏற்பட்டது. சிறிது காலத்திலேயே நாங்கள் வீடுமாற்ற நேரிட்டது. சிவன்கோயில் தெருவிலிருந்த பட்டர் வீடு என்கிற ஒரு பெரிய வீட்டுக்குக் குடிபுகுந்தோம். தெருவும் விசாலமானது. அழகிய சூழ்நிலையும் அமைதியும் பெற்றிருந்தது. பெரிய சிவன் கோயில், அதற்கு நேர் எதிரான தெரு. ஒரு வரிசையில் மட்டுமே வீடுகள் இருந்தன. எதிர் சாரியில், சப்ரிஜிஸ்ட்ரார் அலுவலகம் அதற்கு முந்திய இடம் காலி மனையாகக் நிலைபெற்ற நினைவுகள் : 61