பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-1.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிடந்தது. அதில் சில செடிகள் முளைத்து நின்றன. ஆள்கள் நடந்து நடந்து நடுவில் ஒற்றையடித்தடம் பதிந்து கிடந்தது. ஆபீசுக்கு அடுத்து இரண்டு மூன்று வீடுகள். அவை அடைத்தே கிடக்கும். அப்புறம் சிவன் கோயில் தேர் நின்ற இடம் ஆள் நடமாட்டம் அதிகம் இல்லாத தெரு மாலை நேரங்களிலும் முன்னிரவிலும், வீட்டுத் திண்ணையை ஒட்டி, தெருவிலேயே கட்டில் களைப் போட்டு நாங்கள் பேசிக்கொண்டிருப்போம். கோடை நாள்களில் அங்கேயே படுத்து உறங்கியதும் உண்டு. அவ்விதம் உறங்கிக் கொண்டிருந்த ஒரு இரவில், நேரம் என்ன இருக்கும் என்று தெரியாது. யாரோ திடும்திடுமென்று தெரு வழியே ஒடியது தெரிந்தது. தீ தீ என்று கூப்பாடு போட்டவாறு பின்னால் ஒருவர் ஓடினார். இந்தச் சத்தத்தினால் நான் விழித்து விட்டேன். பக்கத்து வீட்டில் ஒரே வெளிச்சம் நான் படுக்கையை எடுத்துக் கொண்டு, விட்டுக்குள் போகலானேன். தெருவில் கூட்டம் கூடியது. பக்கத்து வீடு ஒலைக் குடிசைதான் தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது. தீ - தீ என்று கூச்சல் கும்பலை கூட்டியது. பலரும் தீயை அணைப்பதில் மும்முரமாக ஈடுபட்டனர். நாங்கள் எங்கள் வீட்டில் நின்றபடி வேடிக்கை பார்த்தோம். அப்பா தீ பற்றிய வீட்டின் பக்கம் சென்றிருந்தார். அந்த வீட்டில், நடுத்தர வயதுடைய ஒரு பெண் வசித்தாள். அவளுடைய நடத்தை ஒருமாதிரி என்று சொன்னார்கள். அவளுக்குப் பிடிக்காத எவனோ ஒருவன், ஏதோ தகராறு காரணமாக, அவள் வீட்டுக்கு தீ வைத்து விட்டான் என்று சொல்லப்பட்டது. நீண்ட போராட்டத்துக்குப் பிறகு தீ அணைக்கப்பட்டுவிட்டது. ஆயினும் மிகுந்த சேதம் தான். விடிந்த பின்னர் வெளிச்சத்தில், கரிக்கட்டையாகக் காட்சி அளித்த வீட்டின் பகுதிகளும், வீட்டினுள் எரிந்து கருகிக் கிடந்த சாமான்களும் அந்த அம்மாளுக்கு நேர்ந்த இழப்பை எடுத்துக்காட்டின. அவளும் அவளுக்கு வேண்டிய சில பேரும் அப்பாவிடம் முறையிட்டனர். அப்பாவும் யார் யாரிடமெல்லாமோ விசாரணை நடத்தினார். முடிவு என்ன ஆயிற்று என்பது எனக்குத் தெரியாது. அக்காலத்தில் ஜனங்கள் சர்க்கார் உத்தியோகஸ்தர்களுக்கு (அரசு 62 % வல்லிக்கண்ணன்