பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-1.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அதிகாரிகளுக்கு பயம் கலந்த மரியாதை தந்து கொண்டிருந்தார்கள். அப்பா கலால் மற்றும் சுங்க இலாக்கா அதிகாரி தான். ஆனாலும், அவர் பணிபுரிந்த ஊர்களில் எல்லாம், அவரை இன்ஸ்பெக்டர் பிள்ளை என்றே மரியாதை காட்டி, அஞ்சினார்கள். குற்றம்குறைகளை தீர்க்கும்படி முறையிட்டார்கள். போலீஸ் இன்ஸ்பெக்டருக்குக் காட்டு கிற பயத்தையும் பணிவையும் மக்கள் அப்பாவுக்கும் அளித்தார்கள். அப்பா நல்ல உயரமாய், எடுப்பான தோற்றம் கொண்ட உருவின ராய் விளங்கினார். முறுக்கிவிட்ட மீசை அவருக்குத் தனி மிடுக்கு தந்தது. அத்துடன் இன்ஸ்பெக்டர் பிள்ளை என்ற கவுரவிப்பும் அவருக்கு பெருமை சேர்த்தது. அவரும் குற்றவாளிகளை விசாரிக்கவும், அடி உதைகள் கொடுத்து ஆக்கினைகள் செய்யவும் தண்டனைகள் விதிக்கவும் தயங்கியதில்லை. அவரது அதிகார தோரணையும், துணிச்சலான செயல்முறைகளும் அவருக்கு வெற்றிகள் பெற்றுத் தந்தன. குற்றம் செய்தவர்கள் உண்மையை ஒப்புக்கொண்டு, எதிர்ப்பு காட்டாது அவரது தீர்ப்புகளை ஏற்றுவந்தனர். ராஜவல்லிபுரத்தில் தங்கியிருந்த நாள்களில் ஒருநாள், நடுத்தெருவில் ஒரு தோட்டத்தில் இருந்த வைக்கோற் படப்பில் எவனோ தீ வைத்து விட்டான். வீட்டக்காரர். அப்பாவிடம் முறையிட்டார். அப்பா ஊர் மறவர்களை வரவழைத்தார். உங்க ஆள்களில் ஒருவன் தான் இதை செய்திருக்க வேண்டும். மரியாதையாக அவனை கொண்டு வந்து நிறுத்துங்கள் இல்லையென்றால் மறக்குடிக் குடிசைகள் எல்லாம் தீப்பற்றி எரியும் என்று கண்டிப்பாகச் சொன்னார். அவர் சொன்னபடியே செய்து தீர்ப்பார் என்று உணர்ந்த மறவர்கள் சிறிது நேரத்திலேயே உண்மையான குற்றவாளியை பிடித்திழுத்து வந்து அப்பாமுன் நிறுத்தினார்கள். அவனுக்கு சரியானபடி உதை கொடுக்கப் பட்டது. அவன் அலறி அடித்து அப்பாவின் காலில் விழுந்து கும்பிட்டு, மன்னிக்கும்படி கெஞ்சினான். வைக்கோல் படப்பின் கிரயத்தை அவன் கொடுத்தாக வேண்டும் என்று அப்பா உத்திரவிட்டார். பகை உணர்வினால், புத்திகெட்டுப் போய் இப்படிச்செய்து விட்டான்; அவனால் இவ்வளவு தெண்டம் கொடுக்க இயலாது; ரொம்பவும் கஷ்டப்படுகிறவன் என்று தேவமார் அவனுக்காகப் பரிந்து பேசினார்கள். அவனும் அழுது கெஞ்சினான். படப்பை இழந்தவரும், போகட்டும் விட்டு விடுங்கள்;அவன் கொடுக்கிற தொகையை கொடுக்கட்டும் என்று மனமிரங்கினார். அப்பாவும் அதற்கு இசைவு நிலைபெற்ற நினைவுகள் 38 63