பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-1.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவள் நன்கு கவனித்து, எல்லாம் சரியாக இருக்கு என்றாள். ஐயா, உங்களுக்கு ரொம்பப் புண்ணியம் நீங்க நல்லாஇருக்கனும் உங்களாலே தான் இழந்துவிட்ட சொத்துகள் எனக்கு திரும்பக் கிடைத்தன என்று நன்றியுடன் கூறிக் கும்பிட்டாள். விடைபெற்றுச் சென்றாள். மாணிக்கத்தின் கட்டுகளை அவிழ்த்து விடும்படி செய்தார் அப்பா. மூன்று பேரையும் அங்கேயே உட்காரச் செய்து, இலை போட்டு சாப்பாடு பரிமாற வைத்தார். மூவரும் போதும் போதும் என்று சொல்கிற வரை அவர்களுக்கு உணவு வழங்கப்பட்டது. பிறகு வெற்றிலை பாக்கு அளிக்கப்பட்டது. உண்மையாக உழைத்துப் பிழைக்கனும் ஏன் திருடி வாழ ஆசைப்படுறிங்க? அப்பாவி ஜனங்களின் வயிற்றெரிச்சலை ஏன் வாங்கிக் கட்டிக் கொள்கிறீங்க? என்று அப்பா நல்ல வார்த்தை சொன்னார். மாணிக்கம் இப்படிச் செய்வான்னு நான் நினைக்கவேயில்லை. ஏன் மானிக்கம் உன் புத்தி இப்படிப் போச்சு? என்று வண்டிக்காரனிடம் GuorTអំ. அவன் தலைகுனிந்து நின்றவன் தான். வாய் திறந்து எதுவும் சரி போங்க இனிமேல் ஒழுங்கா இருங்க புத்தியாய் பிழையுங்க என்று கூறி மூன்று பேரையும் அனுப்பிவைத்தார் அப்பா. அன்று போனவன் தான். அதன்பிறகு மாணிக்கம் வேலைக்கு வரவேயில்லை. அவனுக்கு பதிலாக, மாடசாமி என்கிற உவச்சர் குலத்தவன் வண்டிக்காரனாக வந்து சேர்ந்தான். நன்றி உணர்வு கொண்டிருந்த தாசி, அதன் பிறகு அவ்வப்போது மகளுடன் எங்கள் வீட்டுக்கு வந்து பேசிக்கொண்டிருந்து விட்டுப் டோனாள். அவள் வீட்டில் பண்ட பலகாரம் செய்தால், அவற்றில் ஒரு பங்கை பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு வந்து அன்புடன் அளிப்பதை வழக்கமாகக் கொண்டாள். சில நாள் என்னையும் அண்ணனையும் தன்னுடன் வீட்டுக்கு அழைத்துச் சென்று உபசரித்தாள். அவள் மகளை அக்கா என நாங்கள் அழைத்தோம். அவளுக்கு நீண்ட தலைமுடி கருகரு என வளர்ந்து தொங்கியது. அவள் தாய் வாசனைத் தைலம் தடவி அந்த முடியை வாரிப் பின்னி, நுனியில் குஞ்சலம் கட்டித் தொங்கவிட்டு அழகு பார்ப்பாள். மினுமினுவென்று நீண்டு தொங்கிய சடையும் குஞ்சலமும் வசீகரமாக விளங்கின. 58. 38 வல்லிக்கண்ணன்