பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-1.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விளைப் பண்ணையார் என்று குறிப்பிடப்பட்டார் அவர் தற்பெருமை மிக்கவர் இளம் வயதுதான். இவர் ஜரிகைக்கரை வேட்டி, சில்க் சட்டை, பட்டு லேஞ்சி என்று அணிந்து திரிவார். பெரும் பேச்சுப் பேசுவார். பேச்சில் நேர்மை கிடையாது என்பதை அவர் செயல்கள் நிரூபித்தன. ஒரு சமயம் பண்ணையார் இரண்டுபேருடன் மாலை நேரத்தில் வீட்டுக்கு வந்தார். அப்பாவுடன் வெகுநேரம் பேசி கொண்டிருந்தார். இருட்டி விட்டது. நிலாக் காலம் இல்லை. இரவு கும்மென்று கவிந்திருந்தது. இருட்டிலே ஊர்போய்ச் சேர்வது கஷ்டமாக இருக்கும்; அரிக்கன் லாந்தர் ஒண்னு கொடுங்க, நாளைக்கு கொடுத்து அனுப்பிவிடுகிறேன் என்று அவர் அப்பாவிடம் கேட்டுக் கொண்டார். அப்பாவும் ஒரு லாந்தரை அவரிடம் கொடுக்கச் செய்தார். புதிதாக வாங்கப்பட்டிருந்த நல்ல லாந்தர். எங்கள் வீட்டில் நான்கு அரிக்கன்லாந்தார்கள், அநேக சிறு விளக்குகள் (பெட்ரூம் லைட் என்று சொல்லப்பட்ட ரகம் பழக்கத்தில் இருந்தன. ஒவ்வொரு அறைக்கும் ஒரு விளக்கு தினசரி சாயந்திரவேளைக்கு முன்னதாகவே, வேலைக்காரன் லாந்தர் சிம்னிகளை நன்றாக, திருநீறு அல்லது சாம்பல் வைத்து, துலக்கி வைப்பான். புகைக் கறை படியாது சிம்னிகள் பளிரென்றிருக்கும். கைவிளக்குகளில் (குருவிலைட்டு என்று அம்மா குறிப்பிடுவாள்) ஒன்றில் சிம்னி சுண்ணாம்பு பூசியதுபோல வெள்ளை நிறத்தில் இருக்கும் கோழி முட்டைசிம்னி என அம்மா சொல்லுவாள். நல்ல புதிய லாந்தரை வாங்கிப்போனார் பண்ணைய விளைப் பண்ணையார். மூன்று நாள்களுக்குப் பிறகு தான் அவர் வந்தார். அவர் வாக்களித்தபடி மறுநாளே லாந்தரைக் கொடுத்தனுப்பவில்லை; அன்று வந்த போது அவர் அதை கொண்டுவரவுமில்லை. அம்மா, லைட்டை அனுப்பிவைக்கவே இல்லையே என்று நினைவுபடுத்தவும், அடடா, மறந்தே போனேன், கட்டாயம் நாளைக்கு கொடுத்து அனுப்புகிறேன் என்று அவர் உறுதி கூறினார். . அப்படி அவர் செய்யவில்லை. ஒரு வாரத்துக்குப் பிறகு அப்பா வேலைக்காரனை பண்ணைய விளைக்கு அனுப்பினார், லாந்தரை திரும்பப் பெற்று வருவதற்காக சில மணிநேரம் சென்று அவன் வந்தான், கையில் ஒரு லாந்தருடன், முணமுணத்தபடியே வந்தான். அவன் கொண்டு வந்தது ஒரு பழைய 72 38 வல்லிக்கண்ணன்