பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-1.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொதுவாக, அந்நாள்களில் எல்லா ஆண்குழந்தைகளுக்கும், பெண்பிள்ளைகளைப் போலவே, தலைமுடியை நீளமாக வளரவிடும் பழக்கம் இருந்தது. பெரிய ஆண்கள் கூட தலைமுடி வைத்திருப்பது சகஜமாக இருந்தது. பெரியவர்களில் சிலபேர் தலைமுடியை ஒட்ட வெட்டி மொட்டைத் தலையர் மாதிரி காட்சி தருவார்கள். படித்து நாகரிகமானவர்கள் கிராப் வெட்டிக்கொள்ளும் வழக்கம் சிறிது சிறிதாக வந்தது. அண்ணனுக்கு சீக்கிரமே கிராப் தலை ஏற்பட்டுவிட்டது. எனக்கும் தம்பிக்கும் வெகுகாலம் வரை நீண்ட தலைமுடி தான். பெருங்குளத்தில் வசிக்கையில், வழக்கம் போல் தலைசீவிப் பின்னி பூச் சூடியிருந்த ஒருநாளில் நடந்த சம்பவம் இது. அன்று ஏதோ விசேஷநாள். அப்பாவைக் கண்டுபோக பலபேர் வந்திருந்தார்கள். மாலை நேரம் அப்பா, அம்மா, அண்ணன், தம்பி எல்லோரும் வீட்டின் முன்பக்கம் திண்ணையில் இருந்தார்கள். வேலைக்காரன், சேவகர்கள் வழக்கமான இடங்களில் நின்றார்கள். பார்க்க வந்தவர்கள் கும்பலாக தெருவில் நின்று பேசிக்கொண்டிருந்தார்கள். நான் வீட்டினுள் அடுப்பங்கரைப் பக்கம் போனேன். பின் வாசல்படி மீது நின்று என் தலையிலிருந்த பூச்சரத்தை எடுத்தேன். அது வாடி யிருந்தது. கையை உயர்த்தி பூவை சுழற்றி விட்டெறிந்தேன். எப்படியோ கால் இடறி படிக்கட்டில் உருண்டு தோட்டத்து மன் தரையில் விழுந்தேன். உயரமான படி வரிசை மூன்று கல்படிகள். ஒவ்வொரு படியிலும் விழுந்து புரண்டு கீழே தரைக்கு வந்ததில், இடது கை முழங்கை மூட்டில் பலத்த அடிபட்டிருந்திருக்கிறது. அடிபட்டதனால் வலி ஏற்பட்டது. நான் கண்ணிர்வடித்தபடி எழுந்து பூச்சரத்தை எடுத்துத் துர வீசிவிட்டு, பட்டாசலுக்கு வந்தேன். கைவலி அதிகமாகியது. நான் உரக்க அழவில்லை. பட்டாசலில் தொங்கிய ஊஞ்சலில் படுத்துவிட்டேன். சிறுபிள்ளைகளுக்கான பிரம்பு ஊஞ்சல், சுற்றிலும் மரத்தினாலான தடுப்பு இருக்கும். தொட்டில் ஊஞ்சல் என்று சொல்லப்பட்டது. அதில் படுக்கை தலையணைகள் கிடந்தன. தலையணையை கைக்கு அண்டை கொடுத்து, படுத்து விட்டேன். வலி காரணமாக அழுகை வந்தது. ஆயினும் வாய்விட்டு அழாமல் கண்ணிர் வடித்தபடி கிடந்தேன். நேரம் போயிற்று வந்தவர்கள் விடைபெற்றுப் போனார்கள். எங்கே 74 : வல்லிக்கண்ணன்