பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-1.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சப்பரம் நகர்ந்ததும், குழந்தையின் தாய் பிள்ளையை எடுத்து அனைத்துக் கொண்டாள். இதை வேடிக்கை பார்க்கக் கூடியிருந்த கும்பலும் கரைந்து மறைந்தது. இனி எல்லாம் சரியாப் போகும் என்று அநேகர் அந்தத் தாய்க்கு ஆறுதல் கூறினார்கள். ஆனால் எதுவும் சரியாகவில்லை. சில வாரங்களில் அந்தக் குழந்தை இறந்துவிட்டது. பிரச்னைக்குக் காலம் அளித்த தீர்வு அது. அந்த வட்டாரத்தில் குரங்கணி அம்மன் பிரசித்தி பெற்ற சிறு தெய்வமாக விளங்கியது. அந்த அம்மன் கோயில் ஏரலுக்கு அருகே, ஆற்றின் மறுகரையில் இருந்தது. திருவிழாக் காலத்தில் - ஆடி மாதம்கோயில் பரபரப்பும் பெரும் கவனிப்பும் பெற்றுக் காணப்படும். ஆடி மாதம் கடைசிச் செவ்வாயன்று வெளியூர்களில் இருந்தெல்லாம், வண்டி கட்டிக் கொண்டு ஜனங்கள் வந்து கூடுவார்கள். பெரிய பெரிய கூண்டு வண்டிகள். அன்று அம்மனுக்கு ஏகப்பட்டு ஆடுகள் வெட்டி, பொங்கலிட்டு, பூசைகள் செய்வார்கள் பக்தர்கள். இத் திருநாளுக்காகக் கோயிலைச் சுற்றிலும் ஆற்று மணலிலும், வளையல் கடைகள், மிட்டாய் கடைகள், மற்றும் பலரகமான கடைகள் ஏற்பட்டிருக்கும். ராட்டினங்களும் வந்திருக்கும் பெரும் கும்பல் காரணமாக கடைகளில் நல்ல வியாபாரம் இரவு நேரத்தில் வாண வேடிக்கை நடைபெறும் அவுட் வாணங்கள், விதம்விதமான ஆகாச வெடிகள், கொளுத்தி வானில் விடப்பெறும். வெடிகள் ஒளிக்கோடுகளாக உயரப் போவதும் மேலே போய் வெடித்து கலர்கலராகப் பொறிகள் தெறித்துச் சிதறுவதும், மத்தாப்பூக்களாக ஒளிர்ந்து கீழிறங்குவதும் பார்ப்பதற்கு நல்ல வேடிக்கையாக அமையும் ஒரு வருடம் அப்பா எங்களை எல்லாம் குரங்கணிக்கோயில் திருவிழா பார்க்கக் கூட்டிப் போனார். வண்டியில் பகலிலேயே ஏரலுக்குப் போய் தங்கியிருந்தோம். இரவில் ஆற்றின் இக்கரையிலி ருத்தே அக்கரையில் நிகழ்கிற வாண வேடிக்கைகளை வெகு நேரம் கண்டு களித்தோம். மறுநாள் கோயிலுக்குப் போனோம். மணல் பரப்பில், கடைகள் .78 98 வல்லிக்கண்ணன்