பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-1.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொடர்ந்தோம் முடிவில் ஆழ்வார்திருநகரிக் கோயிலை அடைந்து சாமி தரிசனம் செய்து மகிழ்ந்தோம் நான் முதன்முதலாக அனுபவித்த கண்டறிந்த அந்த ஆலங்கட்டி மழைக்குப் பிறகு அது அளவு பெரிய பெரிய கட்டிகள் விழும் மழையைக் கண்டதேயில்லை. பிற்காலத்தில் வெவ்வேறு ஊர்களில் இருந்த போது, அபூர்வமாகச் சிலவேளைகளில் மழைநீரோடு சிறுசிறு ஐஸ்கட்டிகள் கலந்து விழுவதைப் பார்க்க நேர்ந்தது உண்டு. அவை மிளகு பருமன், மிஞ்சிப் போனால் கண்டைக் காய் அளவு பெரிதாகவே இருந்தன. கைகளில் பிடிக்கும் போதே கரைந்து போயின. நவதிருப்பதி யாத்திரையின் போது பெய்த மழையோடு சேர்ந்து விழுந்த பெரிய கட்டிகள் மாதிரி - கையில் பிடித்து வாயில் போட்டு சிறிது நேரம் வைத்திருக்கக் கூடிய அளவு பெரிதாக - அப்புறம் வரவேயில்லை. ஒரு தடவை பூரீவைகுண்டம் போயிருந்த போது, ஊர் பரபரப்பு பெற்றிருந்தது. மகாத்மா காந்தி வருகிறார் என்று மக்கள் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருந்தார்கள். காந்திஜி இந்திய அரசியலில் முனைந்து விடுதலைப் போராட்ட இயக்கத்துக்குத் தலைமை ஏற்று மும்முரமாகச் செயலாற்றிக் கொண்டிருந்த ஆரம்பகாலம், மக்களிடையே தேசபக்தியையும் விடுதலைப் போராட்ட உணர்வையும் பரப்புவதற்காக நாடு நெடுகிலும் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்தார் அவர் தமிழ் நாட்டுக்கு முதன் முறையாக வருகை தந்த சமயம் திருநெல்வேலி ஜில்லாவில் சுற்றிவந்த காந்திஜி பூரீவைகுண்டத்துக்கும் வந்தார். முற்பகல் நேரம் கடைவீதியில் ஒரு வீட்டின் உயர்ந்த திண்ணை மேல் நின்று பலரும் காந்தியை தரிசிக்கக் காத்திருந்தார்கள். அப்பா வுடன் அண்ணனும் நானும் நின்றோம். எங்கும் ஜனக்கூட்டம் கதர் ஆடையும் காந்திக்குல்லாவும் அணிந்த தொண்டர்கள் மூவர்ணக் கதர்கொடியை உயர்த்திப் பிடித்தவாறு முன்வர, திறந்த காரில் காந்திஜி அமர்ந்திருந்தார். அவருக்கு இருபக்கத்திலும் இரண்டு பேர் இருந்தார்கள். மகாத்மா காந்திக்கு ஜே என்ற கோஷத்துடன் கூட்டம் ஊர்வலமாக நகர்ந்து சென்றது. அதோ காரில் நடுவில் இருப்பவர் தான் காந்தி என்று அப்பா எங்களுக்குக் காட்டினார். காந்தியை பார்க்க முடிந்தது. முன்னும் நிலைபெற்ற நினைவுகள் : 83