பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-1.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தலைமை ஆசிரியர் ஒரு ஐயங்கார். அவரும் கோபித்து, கண்டிப்புகள் எதுவும் பண்ணுவதில்லை. நல்ல மனிதர். ஒருசமயம் அம்மை குத்துற இன்ஸ்பெக்டர் திடீரென்று பள்ளிக்கு வந்து விட்டார். எல்லாப் பிள்ளைகளுக்கும் அம்மை தடுப்பு ஊசி குத்த வேண்டும் என்று சொன்னார். அவர் தலைமை ஆசிரியரிடம் பேசிக் கொண்டிருந்தார். அப்போது மணி பகல் 12 சாப்பாட்டு மணி அடிப்பதற்கு இன்னும் அரைமணிநேரம் இருந்தது. ஆனாலும், அம்மை ஊசி குத்திக்கொள்வதற்கு பையன்கள் பயந்தார்கள் என்று புரிந்து கொண்ட ஒரு மாணவன் பள்ளிவிடும் அறிவிப்பு மணியை ஓங்கி அடித்தான். மணி ஓசை எழுந்ததும் பையன்கள் அவசரம் அவசரமாக வெளியேறி அவரவர் வீடுகள் நோக்கி ஓடினார்கள். பிற்பகல் வகுப்புகளுக்கு அதிகம் பிள்ளைகள் வரவில்லை. நானும் வீட்டிலேயே தங்கிவிட்டேன். பள்ளியில் காத்திருந்த சுகாதார அதிகாரி, வகுப்புக்கு வந்த குறைவான பிள்ளைகளுக்கு மட்டும் ஊசி குத்தி விட்டுப் போனார். இதை மறுநாள் தெரிந்து கொள்ள முடிந்தது. பள்ளி விடும் நேரம் வருவதற்கு முன்னரே மணிஅடித்து எல்லோரையும் ஓடச் செய்த மாணவனையோ, வீட்டுக்கு ஒடிவிட்டு பிற்பகல் வகுப்புக்கு வராமல் இருந்துவிட்ட பிள்ளைகளையோ தலைமை ஆசிரியர் தண்டிக்கவில்லை. ஊசி குத்துவதிலிருந்து தப்பி விட்டீர்கள், இல்லையா அம்மை தடுப்புக்கு ஊசிகுத்திக்கொள்வது நல்லது நோய் வராமல் தடுக்கும் முன்னேற்பாடு அது என்று நல்லுரை கூறினார் அவர். 3. சிவன் கோயில் தெருவில் நாங்கள் வசித்த வீடு தனித்திருந்தது. அதன் விசாலமான திண்ணையில் அமர்ந்து படிக்கும் போது, வானத்தின் அதிசயங்களை எல்லாம் பார்க்க முடிந்தது. மேல்திசைவானில் சூரியன் அஸ்தமிக்கிற போது தோன்றிய விந்தைக் காட்சிகள், ஒளி பெற்ற மேகத்திரள்கள் முதலியவற்றை வேடிக்கையாகப் பார்த்து நாங்கள் பொழுது போக்குவோம். ஊர்ந்து திரியும் மேகங்கள் கூடியும் பிரிந்தும் வெவ்வேறு மாதிரி இணைந்தும் காட்சி அளிக்கையில், அவை மிருகங்கள் போலவும், மனிதர்கள் போலவும் நாடகத் தோற்றங்கள் போலவும் காணப்பட்டன. அப்படித் தோன்றுவதாக எங்கள் கற்பனை நிலைபெற்ற நினைவுகள் 38 85